பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 இலக்கிய ஏந்தல்கள் "உடன் பாடிலாதவர் வாழ்க்கை குடந்தரில் பாம்பொடு உடனொரீஇ யற்று" என்றார். மனப்பொருத்தம் இல்லாத கணவனும் மனைவி யும் ஒரே வீட்டில் இருந்து போராடிக் காலங் கழிப்பதை விட, தனித்தனியே இருந்து அவரவர்க்குரிய வாழ்வை உரிமையோடு அமைத்துக்கொண்டு நாளைக் கழிக்கலாம். இந்தப் புரட்சிக் கருத்தை மு. வ. பலவிடங்களில் பின்வருமாறு வற்புறுத்தியிருக்கக் காணலாம். 'கணவன் மனைவிக்கு இடையே தீராத வெறுப்பு ஏற்பட்ட பிறகு விலக உரிமை வேண்டும். அறிஞர் ஷா கூறுவதுபோல், விலகுவதற்கும் காரணம் என்ன என்று கேட்க நீதிமன்றமும் முன்வரக் கூடாது. விலக உரிமை இல்லாமல் கட்டுப்படுத்துவதற்கு மணம்-திருமணம் என்ற பெயரே கூடாது." குடும்பம் என்றால் ஒருவரின் மனக்கவலையை மற்றவர் குறைப்பதற்காக ஏற்பட்டது. ஆனால் உள்ள கவலையை வளர்ந்து மீளாத் துன்பத்தில் வருத்துவதனால் அந்தக் குடும்பத்தைக் கலைத்து விடுவதே நல்லது." ... " அன்பற்ற குடும்பங்களைக் கலைத்துவிட்டு, அவரவர் உள்ளத்திற்கேற்ப விழையும் உரிமை வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது மு. வ. அவர் களின் உள்ளக் கிடக்கையாகும். பெற்றோர் -குழந்தை உறவுகள் மு.வி. அவர்களுக்குக் குழந்தைகளிடத்தில் உயிர். குழந்தையோடு இருக்கும்பொழுது குழந்தையோடு