பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 36 குழந்தையாக மாறிவிடுவார். 'கு ழ ந் ைத’ என்ற தலைப்பில் தனியொரு நூலினையே அவர் எழுதி இருப்பது கொண்டு அவர்தம் குழந்தை ஈடுபாட்டை உணர்ந்துகொள்ளலாம். அவர் அந் நூலில் குழந்தையின் சிறப்பைப் பெரிதும் கொண்டாடுகின்றார். 'கள்ளோ காவியமோ என்னும் நூலில் மங்கைக் கும் அருளப்பனுக்கும் பிறந்த குழந்தை 'தேமொழி', அந்நூலில் முக்கிய இடத்தினைப் பெறுகின்றாள். பம்பாய்க்கு ஒடிப்போன தாயை வெறுக்கிறது குழந்தை. திரும்பிவந்த மங்கை, தன் குழந்தையன்புக்கு ஏங்குகிறாள். அதனைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். மு.வ. _ "அப்போது சின்ன குழந்தை. இப்போது ஏழு வயது முடிந்த பெண். அப்படித் தூக்கிக் கொஞ்ச முடியுமா?” என்றேன். "எனக்கு அவள் இன்னும் குழந்தைதான். இப்போது உடம்பில் வலு இல்லை. உடம்பு தேறட்டும் பாருங்கள். அப்படித்தான் கொஞ்சப் போகின்றேன்" என்று கனிந்த குரலில் சொன்னாள்.'09 குழந்தையன்பு கிடைக்காது கவலையுற்ற மங்கை, அந்தக் குழந்தையன்பு நெருங்கிவந்து கிடைக்கவிருந்த நேரத்தில் அவள் உயிர் பிரிந்து விடுகிறது. இதனைப் பின்வருமாறு உருக்கமாகக் குறிப்பிடுகின்றார், மு. வி. 'தேமொழி தாயின் கன்னத்தைத் தொட்டாள்; தடவினாள்; "அம்மா’’ என்றாள். மூடியிருந்த கண்கள் திறந்தன; நன்றாகப் பார்த்தன. என்னையும் பார்த்தன. முகம் மலர்ச்சி பெற்றது. - அந்தக் குடும்ப விளக்கு அணைவதற்கு முன்னே ஒருமுறை அழகாக ஒளி வீசியது."