பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 இலக்கிய ஏந்தல்கள் குழந்தைகளிடம் பேரன்பு செலுத்திப் பழகுவதைக் காண்கிறோம்.116 "இவ்வாறு டாக்டர் மு.வ. அவர்கள் குடும்ப வாழ்வின் இன்பத்திற்கு இணையற்ற, செல்வமாய்த் துலங்கும் 'குழந்தை குறித்து அன்பாய் அமைதியாய், அழகாய்ப் பல செய்திகளைப் புலப்படுத்தியிருக்கக் காணலாம். மு. வ. என்ற சா ன் றோ ரீ பெருமகனார் சான்றாண்மைக்கு ஆழி என விளங்கிய பெரியார் ஆவர். திருவள்ளுவர், திருநாவுக்கரசர், தாயுமானார். இராம தீர்த்தர் இவர்கள் மணிமொழிகளில் உள்ளந் தோய்ந்து நின்ற உரவோர். சிறியன சிந்தியாத சீரியர். பிறர் வாழ்வில் உள்ளம் உவந்து நின்ற உத்தமர். எனவே தமிழ் நாட்டு மக்களுக்கு நல்ல குடும்ப வாழ்வு அமைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் சமுதாயத்தின் தாக்குதலில் சிக்குண்டு கிடக்கும் தமிழ்நாட்டுக் குடும்பங் கள் பலவற்றை ஆய்ந்து, குடும்பங்களில் எழும் சிக்கல் களைப் பல்வேறு கோணத்தில் நின்று படம் பிடித்துக் காட்டுகிறார். பிறர் பழிக்காத அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்ற தெளிவுடையவர் அவர். எனவே அறனிழுக்கா இல்வாழ்க்கை அமைய வேண்டியதன் அவசியத்தினைத் தம் படைப்புகளில் அழகுறப் புலப்படுத்துகிறார்; ஒவ்வொரு புதினத்திலும் குடும்ப வாழ்வைத் தெள்ளத் தெளிவாக ஆராய்கிறார். உளந்திருந்தி உயர்ந்து பண்படும் வகையில் மணிமொழி களை-வாழ்வியல் உண்மைகளைப் பொன்மொழியாகப் பொருட்பொருத்தமுறக் கூறிச் செல்கிறார். முடிவுரை இதுகாறும் கண்டவற்றால் டாக்டர் மு.வ. அவர்கள் குடும்ப வாழ்வு சீர்ப்பட்டுச் சிறக்க நினைக்கும் வழிமுறை கள் புலனாகக் கண்டோம். அவர் தம் படைப்புகளில்