பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 நெஞ்சில் கூடுகட்டி வாழும் குயிலோ என வருணிப்பது பழமையான உணர்வுக்குப் புது வடிவம் தருவதாகும். - சிறிய இதயத்தில் காதலாம் உணர்வு பெருகுவ தனைக, கையளவு உள்ளம் வைத்துக் கடல்போல் ஆசை வைத்து விளையாடச் சொன்னானடி என்னும் கண்ணதாசன் அடிகள் புலப்படுத்துகின்றன. கவிஞர் சுரதா காதலார்வமும் பிரிவுத் துயரமும் தோய்ந்திட, செங்கதிர்ச் சுடர் போலே என்கரம் நீண்டிருந்தால் அந்தச் சிங்காரச் சிலையை நான் இங்கிருந்தே தொடுவேன் எண்ணமெல்லாம் ஓர் இடத்தையே நாடுதே என்று பாடி உவமையாலும் உயர்ந்து திகழ்கின்றார். காதலன் வேட்கை புரியுமாறு "கண்ணம்மா" என்னும் தலைப்பில் பாடிய கவிஞர் தமிழ் ஒளி, உள்ளம் எழுதிவிட்டாள்-கண்ணம்மா ஊற்று நீரோடையிலே கள்ளம் அழிந்துவிட்டேன்-அடியேன் காதல் நீராடுகிறேன் - என்று பாடுங்குரல் காதலின் மாட்சி தெரியக் காட்டும், சோமு’வின் பாடலில் இளநெஞ்சின் பேரார்வம் பின்வருமாறு ஒலிக்கின்றது. Ø).g.—3