பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகல் விளக்கு பெருங்காஞ்சி என்ற சிற்றுாரில் சற்று வசதிமிக்க குடும்பத்தினர் சாமண்ணா. அவருக்கு ஏராளமான நிலபுலங்களும் ரொக்கமும் பரம்பரை பரம்பரையாக இருந்து வந்தன. அவருடைய மனைவி நல்லவர்; அழகானவர்; இவர்களுக்கு சந்திரன் என்றொரு மகனும் கற்பகம் என்றொரு மகளும் உண்டு. தாயைப் போலவே சந்திரன் அழகன்; படிப்பில் கெட்டிக்காரன்; கற்பகம் அழகு வாய்ந்தவள்; பண்புகள் நிரம்பியவள். குடும்பத்தில் சாமண்ணாவின் தமக்கை விதவை சிவகாமியும் உண்டு. இவர் பெயர் சிவகாமியாக இருந்தாலும், சிறுவயதில் நோய் வந்து உடல்நலம் குன்றியபோது தலையை மொட்டையடித்துக் கொண்டதால் இவரை மொட்டை யம்மாள் என்றே ஊரார் அழைத்து வந்தனர். ஆறாவது வகுப்பில் சேர்வதற்காகச் சந்திரன் பெருங் காஞ்சியை யடுத்த வாலாசாபேட்டைக்கு வருகிறான். சந்திரனின் தந்தை நகர வாழ்க்கையை வெறுத்தவர், அவர் உடன் பிறந்த தம்பி இப்படித்தான் சிறுவயது தொடங்கியே ஊதாரியாக இருந்து, நில புலன் வேலைகளைக் கவனிக் காமல், அடிக்கடி நகரத்திற்குச் சென்று, ஆடம்பர வழிகளில் தவறாக வாழ்ந்து கெட்டவர். எனவே சாமண்ணா முதலில் தம் மகன் வெளியூர் சென்று படிப்பதை விரும்பவில்லை. பள்ளிக்கூட இன்ஸ்பெக்ஷ னுக்கு வந்த இன்ஸ்பெக்டர் சந்திரனுடைய அறிவுத் திறத்தை நேரிற்கண்டும், பிற ஆசிரியர்கள் வழி கேள்விப் கட்டும் சாமண்ணா வீடு சென்று, சந்திரனின் மேல் படிப்பிற்கு வற்புறுத்தவே சாமண்ணா இறுதியில் சம்மதித்