பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

კ72 இலக்கிய ஏந்தல்கள் காலம் கரைகிறது. கற்பகம் குறக்கெழுத்துப் போட்டி, ஐாதகம் முதலியவற்றில் நம்பிக்கையுள்ள மாலன் என்பவனை மணக்கிறாள். மாலன் வேலய்ய னோடு உடன் பயில்பவன். வேலய்யன் அவனைப் பற்றி நற்சான்று சொன்ன பிறகே அந்தத் திருமணம் ஏற்பாடா கிறது. வேலய்யன் தன் நெஞ்சங் கவர்ந்த கற்பகத்தை மணக்க முடியாமற் போனான். தன் நெஞ்சில் இருந்ததைப் பெற்றோர்க்குத் தெரிவித்துத் திருமணம் செய்து கொள்ளத் தயங்கிவிட்டான் வேலய்யன். எனவே தான் இளமை முதல் வெறுத்த தன் அத்தை மகள் கயற்கண்ணியைத் திருமணம் செய்து கொள்ள நேரிடு கிறது. அவன் தங்கை மணிமேகலை ஏழை ஆசிரியர் ஒருவருக்கு மணம் முடித்து வைக்கப்படுகிறாள். பி.ஏ. தேறிய வேலய்யன் கூட்டுறவுத்துறைத் துணைப் பதிவாள ராகக் கோவையில் வாழ்க்கையைத் தொடங்கிப் பின் ஈரோட்டிற்கு மாற்றலாகி இறுதியில் சென்னைக்கு வருகிறான். முந்நூறு ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் அவன் வாழ்க்கை நன்றாக நடக்கிறது. மாலனுக்கு நூறு ரூபாயில் வேலை பார்த்துத் தருகிறான் வேலய்யன். அது அவனுக்கு நிறைவை அளிக்கவில்லை. தன்னுடைய மனைவி கற்பகத்தைத் தன் தந்தையிடம் சென்று அரிசி ஆலைத் தொழில் தொடங்கப் பணம் வாங்கி வருமாறு தொந்தரவு செய்கிறான். கற்ககத்தின் தந்தை சாமண்ணா ஐந்து ஏக்கரா நிலத்தை அவன் மக்கள் திருவாய்மொழி, திருப்பாவை மேல் எழுதி வைக்கிறாரேயொழிய, ரொக்க மாக மாலனுக்குக் கொடுத்து உதவ முன்வரவில்லை. எனவே கற்பகம் தன் அண்ணன் சந்திரன் பிரிவால் உயிர் துறந்து விட்ட தாயின் வீட்டிற்குத் தந்தையின் நிழலில் தங்கி வாழ வருகிறாள்.