பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 இலக்கிய ஏந்தல்கள் விட்டதாகவும், சிறிது சிறிதாக அவனுடம்பை அலைத்து அரித்துக் குலைத்துவந்த பெருநோய்-தொழுநோய் முற்றிய நிலையில் நோயின் கடுமை தாங்காமல் ஆஸ்பத்திரியில் சேர்ந்துவிட்டதாகச் சொன்னார்கள். வேலய்யன் சென்னையில் வாழ்ந்து வந்தபொழுது அலுவலகம் முடிந்து வீடு திரும்பும்பொழுது வேலு வேலு" என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்கும் பொழுது சாலையோரத்தில் ஒருவன் விழுந்து கிடக் கிறான். அவனைத் தூக்கிப் பார்த்தபொழுது அவன் சந்திரனாகக் காணப்படுகிறான். தொழுநோய் முற்றிய நிலையில் அவன் அறுவறுக்கத் தக்கவனாக நிற்கிறான். தன் மனைவி வாலாசாபேட்டைக்குச் சென்றிருப்பதால், தன் வீட்டிற்கே சந்திரனை அழைத்துச் சென்று சந்திரன் வேண்டுகோட்படியே தனியிடம் தந்து அவனுக்கு உணவிடுகிறான். சந்திரன் மனங்கரைந்து கலங்கித் தன் கடந்துபோன இழிவான வாழ்க்கையை உருக்கத்தோடு எடுத்துரைக்கிறான். அவனுக்குக் காய்ச்சல் ஏற்படுகிறது. இறுதியில் இறந்துபோய் விடுகிறான். உடல் அடக்கத் திற்கு முன் இடுகாட்டில் செய்தி கேள்விப்பட்டு ஊரிலிருந்து ஓடிவந்த கற்பகம் அண்ணா அண்ணா எனக் கலங்கி அழுகிறாள். இவ்வளவோடு சந்திரனுடைய சோகக் கதை முற்றுப் பெறுகிறது. நாவலாசிரியர் பேராசிரியர் டாக்டரி மு. வரத ராசனார் இந்நாவலை எழுதியுள்ளார். இந் நூலிற்கு ச் சாகித்திய அகாதெமிப் பரிசு கிடைத்தது. வேலய்யன் கூற்றாக இந்நாவல் அமைந்துள்ளது. 406 பக்கங்கள் கொண்ட இந்நாவல், ஒழுக்கக் கேட்டிற்கு