1.பு. 375 அரிச் சிக்கிசி சீரழியும் இளைஞன் ஒருவனின் கதையை மங்கந்தோன்ற எடுத்துரைக்கின்றது. 'டே. எப்போதும் இதில் வேகம் வேண்டாம்'டா. பங்கம் உன்னையும் கெடுக்கும். உன்னைச் சார்ந்தவர் களையும் கெடுக்கும்” என்று சைக்கிளில் செல்பவன் கூறும் மொழிகள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. 'விளையாட்டாக இருந்தாலும், விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும், தெரியுமா? நீயே அரசன் என்று அண்ணிக்கொண்டு, உன் விருப்பம்போல் ஆடமுடியாது. தெரிந்துகொள்" என்று பந்தாட்டக்காரன் சொல்லும் சொற்கள் பெரிய அறவுரையாக அமைகின்றன. சந்திரனைப்போல் நல்ல அழகும் கூரிய அறிவும் பெற்று அதனால் செருக்கடைந்து சீரழிந்து தாமும் கெட்டுப் பிறர்க்குச் சு ைம யாக வாழ்வதைவிட, வேலய்யனைப்போல் அறிவு குறைவாக இருந்தாலும், சிறந்த பண்புகளைப் பெற்று அடக்கமான வாழ்வு வாழ்ந்தாலே போதும் என்ற உயர்ந்த வாழ்க்கைக் குறிக்கோள் இக் கதையைப் படிக்கின்றவர்கள் உள்ளத்தில் உருவாகும். சந்திரன் வாழ்க்கை அரளிச் செடி போன்றது; பித்தளை விளக்குப் போன்றது; வேலய்யன் வாழ்க்கை துளசிச் செடி போன்றது; அகல் விளக்குப் போன்றது. நாவலாசிரியர் மு. வரதராசனார் இந் நாவலில் வாழ்க்கைக்குத் தேவையான ஓர் உயரிய படிப்பினையை வழங்கியுள்ளார்.
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/376
Appearance