பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 இலக்கிய ஏந்தல்கள் பின்னிய கார்நிறக் கூந்தலிலே-வைத்துப் பின்னிணையோ இந்த நெஞ்சினையே பின்னுமக் கூந்தலின் கொண்டையிலே -இசை பின்னினை பாடல்கள் நெய்தனையே - இளவேனில் கவிதைத் தொகுதி கூந்தலில் மலராகக் காதலிளைஞனின் மனமும் பின்னப்படுவதால் கன்னியின்பால் தன் மனம் சிக்கியிருப்ப தாக உணரும் இளநெஞ்சின் சித்திரம் இது, மற்றும் கொண்டை முடிந்தவாகு பற்பல நினைவூட்டும் அழகுப் பாடலாகத் தோன்றுகிறது என்று கவிஞர் உணர்த்து கின்றார். இக் கவிதையின் வண்ணத்தில் ஒரளவு மரபு படிந்திருக்கக் காண்கிறோம். முருகிற் சிறந்த கழுநீரும் முற்றா இளைஞர் ஆருயிரும் திருகிச் செருகும் குழன்மடவீர் செம்பொற் கபாடம் திறமினோ! - - கலிங்கத்துப்பரணி, கடை திறப்பு என வரும் கலிங்கத்துப் பரணியின் கடைதிறப்புப் பாடல், மறுமலர்ச்சிக் கவிதையின் அழகுக்குப் பின்புலமாகின்றது. வெண்ணிலா என்னும் பாடலில் கவிஞர் 'சோமு’ காட்டும் இசாமியக் காதலர் பேசுங்குரலில் ஆண்குரல், முத்துப் போலும் நிலவதிலே (ஒன்) மூக்குத்தியைக் கண்டாக்கா பித்துப் பிடிக்குதடி-தங்கரத்தினமே பேசமுடியுதில்லை-பொன்னுரத்தினமே எனப் பாடுந்திறம் சுவையானது. நிலவொளியே மயக்கும் எழில் வாய்ந்தது. காதலியின் மூக்குத்தியை அந் நிலா