பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 இலக்கிய ஏந்தல்கள் கோலமாகப் பார்த்து உணர்ந்து பாடல் யாத்து வருகின் றனர். முடிவுரை இவ்வாறாக இக்காலக் கவிதைப் போக்குகள் பல திறத்தவனாய் இலங்கக் காணலாம். பழமையில் வேர் விட்டுப் புதுமையிற் கிளை படர்ந்து செழித்து நிற்கும் ஆலமரமாய்க் கவிதை பிறங்குகின்றது. மரபுக் கவிதை களில் காணலாகும் மாட்சிகளைக் காண்பதோடு, சமுதாய நோக்கமைந்த கீர்த்தியும் இக்காலக் கவிதைகளில் இலங்கிடக் காணலாம். காதலும் இயற்கையும் சங்க காலக் கவிதையின் பாடுபொருள்களின் பயனாக அமைய, இக்காலக் கவிதைகளில் சமுதாயப் படப்பிடிப்பு பாடுபொருளாய்த் துலங்கி, நெஞ்சில் சில அலைகளை ஏற்படுத்துகின்றது. சுருங்கக் கூறின் முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் இக்காலக் கவிதைகள் மக்கட் சிந்தனை யார்வத்தினைத் துண்டிவிடும் போக்கில் நிறைந் தொளிர்தல் காணலாம்.