பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 இலக்கிய ஏந்தல்கள் பட்டது. அவர் எழுதிய புல்லின் இதழ்கள் (Leaves of grass) புதுக்கவிதை உலகப் புகழ் பெற்றது. பலவகைக் கண்டனக் கணைகளுக்கும், திறனாய்வுக் கணைகளுக்கும் ஆளாகியும், உலகப் புகம் பெற்றமையால் இக்கவிதையின் வடிவ அமைப்பு ஆங்கிலத்தில் நிலையான இடத்தைப் பெற்றது. வால்ட் விட்மனைப் பின்பற்றி, எஸ்ராபவுண்டு கட்டுப்பாடற்ற கவிதை (verse libre) இயக்கம் ஒன்றைப் பரப்பத் தெரடங்கினார். இவ் இயக்கத்திற்காக 1912இல் மூன்று கொள்கைகள் உருவாக்கப்பட்டன. 1. எழுதும் பொருளை நேர்முகமாக அணுகும் முறை. 2. கவிதையின் வெளிப்பாட்டுக்கு எந்த வகையிலும் பயன்படாத ஒரு கிறுசொல்லையும் சேர்க்காமல் இருத்தல். 3. சொற்றொடர்களில் அமையும் இசை தழுவிய, தொடர்ச்சி. - - இவை கவிதை உருவாக்கத்தில் பின்பற்றப்பட வேண்டிய அடிப்படைக் கோட்பாடுகள் என ஏற்றுக் கொள்ளப்பட்டன. - எஸ்ராபவுண்டு தோற்றுவித்த இயக்கம், அவருக்குப் பின்னர் வந்த டி.எஸ். எலியட் போன்றோரால் மிகவும் சிறப்பாக வளர்க்கப்பட்டது. எலியட்டின் கட்டுப்பாடற்ற கவிதைகள் பல, ஆங்கில இலக்கியத்தை அணி செய்யத் தொடங்கின. தொடக்கத்தில் எலியட்டின் கவிதைகளுக்கு எதிர்ப்பு இருந்தது. ஆனால் பாழ்நிலம் (Waste land) என்ற அவரது கவிதை நோபல் பரிசைப் பெற்றபோது, மக்கள்