பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 - இலக்கிய ஏந்தல்கள் அஞ்சொலிள மஞ்ளுையென அன்னமென மின்னும் வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள் -கம்பராமாயணம்; சூப்பனகைப் படலம் 31 என் ற பாடலில் பெண் பாத்திரத்திற்கேற்ப மெல்லொலிகள் பயின்று, நடையழகை ஒசை நயத்துடன் விவரிக்கின்றது. சிற் றிலக்கிய காலத்தில் கலிவெண்பா என்னும் பாவகை f இடைவிட்ட அடிதொறும் இறுதியில் முதல் தொடைக்கு ஏற்ற தனிச்சொல் பெற்று, கண்ணி என்னும் பெயரால் கருத்து முற்றுப் பெறுங்காறும் வளர்ந்து செல்லும் ஒருவகை வடிவ அமைப்பைப் பெற்றது. உலா, தூது முதலிய சிற் றிலக்கிய வகைகளில் இத்தகைய புதிய வடிவுடன் கூடிய கலிவெண்பா வகைகளைக் காணலாம். குறவஞ்சி முதலான சிற்றிலக்கியங்களில் இராகம் தாளம் ஆகிய குறிப்புகளோடு கீர்த்தனங்கள் என்னும் இசைப்பா வகைகளின் வடிவங் களும் இடம் பெற்றுள்ளன. - வானரங்கள் கனிகொடுத்து மந்தியோடு கொஞ்சும் மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும் கானவர்கள் விழியெறிந்து வானவரை யழைப்பார் கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார் தேனருவித் திரையெழும்பி வானின் வழியொழுகும் செங்கதிரோன் பரிக்காலுங் தேர்க்காலும் வழுகும் கூனலிளம் பிறைமுடித்த வேணியலங்காரர் குற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே -திருக்குற்றாலக் குறவஞ்சி, 44 என்ற பாடலில் ஒசை நயம் அழகுற அமைந்திருப்பதைக் காணலாம். இது யாப்பின் உதவியால் கிடைத்த பயனாகும். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் ஆசிய சோதி, - *