பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பர். $ 1 கருத்துக்கள் தம்மைத் தாமே ஆளக் கற்றுக் கொண்ட புதிய மக்களாட்சி முறையே புதுக்கவிதை -மு. மேத்தா என்ற புதுக்கவிதையாலும் உள்ளடக்கத்தின் புதுப் போக்குக் குறித்து அறிய முடிகின்றது. உருவத்தில் மட்டு மன்று உள்ளடக்கத்திலும் புதுப்போக்குடன் புதுக்கவிதை கள் தோன்றுகின்றன. பொதுவுடைமைத் தாக்கத்தால் புதுக்கவிதைகள் சமுதாய நிலைகளைச் சுட்டுகின்றன. இன்றைய சமுதாயத்தில், வாழ்க்கையைக் கூர்ந்து நோக்கினால் பல சமுதாய அவலங்களைக் காணலாம். சமயம், அரசியல், கட்சிகள், நம்பிக்கைகள், குடும்பம் இவைஒவ்வொன்றையும் அவ்வவற்றின் தோற்றமூல காரணங்களோடு சேர்த்துச் சிந்திக்கும் ஆற்றல் படைத் தவர்கட்கு, சமூகவியல் கண்கொண்டு நோக்குபவர்கட்கு, இந்தச் சமுதாயக் கேடுகள் தட்டுப்படாமல் போகாது. இன்றைய புறவாழ்க்கையில் நாம் காணும் பல்வேறு பிரச்சனைகள், உண்மை நிகழ்ச்சிகள் புறவாழ்க்கையுடன் நின்று போவதில்லை. அவை நம்முடைய வறுமை, வளம், காதல், நட்பு, பக்தி, தத்துவ ஆய்வு ஆகியவற்றிலெல்லாம் மாற்றங்களை உண்டு பண்ணுகின்றன. படைப்பாளர்கள் நம் வாழ் மாற்றங்களை விளைவிக்கும் புறக்கூறுகளில் தம் சிந்தனையை விரிக்கின்றனர். எனவே சுதந்திரம், மக்களாட்சி, சமத்துவம், ஆட்சி அமைப்பு போன்ற நம் கட்டமைப்பை இன்று வழிநடத்தும் அரசியல், இதன் விளைவுகளான சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகள், இவற்றால் உருவாகும் நடைமுறை வாழ்க்கை ஆகியவை புதுக்கவிஞர்களின் பரிசீலணைக்குட்படுகின்றன,