பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 இலக்கிய ஏந்தல்கள் தால் தோன்றிய கவிதையாகும். இக்கவிதையைப் படிப்பவர், வேலைக்காரியைப் பார்க்கும்போது காதல் விகாரமாகப் பார்க்க வாய்ப்புண்டு. கவிதை சமுதாயத் தைத் திருத்துவதாக, அறிவுரை கூறுவதாக அமைய வேண்டும். சமுதாயத்திலிருந்தும் குறைகளைக் காட்டி அவற்றைத் திருத்த முயலவேண்டும். அவ்வாறின்றிச் சமுதாயத்திற்கு ஊறுவிளைவிப்பதாக, குறைகளைச் செய்யத் துாண்டுவனவாக அமையக் கூடாது. இந்நிலை யைப் புதுக்கவிதைகள் மாற்றிக்கொண்டு, நிலைபேற்றுக்கு உதவக்கூடிய சமுதாயப் பார்வையோடு வெளிவர வேண்டும். - புதுக்கவிதைகள் பல எதிர்மறைக் கண்ணோட்டத் துடன் அமைந்துள்ளன. தேசப்பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி என்ற தலைப்பிலமைந்த கவிதை பின்வருமாறு: - சேரிகளில் மட்டுமே நீ யாத்திரை செய்வாய் என்பதைத் தெரிந்து கொண்டதால் உன்னை நேசித்தவர்கள் தேசத்தையே சேரியாக மாற்றி விட்டார்கள்! o -மு. மேத்தா, கண்ணிர்ப் பூக்கள், ப. 28 இந்திய நாடே சேரிகளாக மாற்றப்பட்டுவிட்டன என்று புலம்புகின்றது இக்கவிதை. இவ்வாறான போக்குகள் நிறையப் புதுக்கவிதைகளில் காணப்படுகின்றன. தன் னம்பிக்கையையும், அறிவுரையையும் புகட்டி மக்களை மண்ணில் நல்ல வண்ணம் வாழவைக்கும் பணியைக் கவிதை கள் முதன்மை நோக்கமாகக் கொள்ளவேண்டும். அவ்வாறு இன்றி அவநம்பிக்கையூட்டி வாழ்க்கை மீது வெறுப்பை