58 இலக்கிய ஏந்தல்கள் இழிவானதாகவும், சுமையெனவும் கருதப்படுகிறது. தவமிருந்து பெண் பெற்றதாகக் கூறப்பட்ட நிலைமாறிப் பாவம் செய்ததனால் பெண் பிறந்தாள் என்று கூறும் சமுதாய நிலை உருவாகியிருக்கிறது. ஆசைக்குப் பெண், ஆஸ்திக்கு ஆண்; ஐந்து பெண்ணைப் பெற்றால் அரசனும் ஆண்டி எனப் பழமொழிகள் தோன்றிவிட்டன. வரதட் சணைக் கொடுமைகள், பெண்ணை வாழாவெட்டியாக்கு கின்றன. நெருப்பில் கருக்குகின்றன. பெண் தற்கொலை செய்துகொள்கிறாள்; கொலை செய்யப்படுகிறாள். இந்த நிலையில் சமுதாயம் Scane என்ற கருவிகொண்டு பிறக்க விருப்பது பெண் என்றால் கருவைக் கலைத்துவிடும் போக்கைக் கடைப்பிடிக்கிறது. குழந்தை நன்னிலையில் உள்ளதா எனக் கண்டறியத் தோன்றிய Scaner பெண்ணெணில் அழிக்க உதவுகிறது. உசிலம்பட்டி என்ற கிராமத்தில் பிறக்கவிருக்கும் எல்லாப் பெண் குழந்தைகளும் இவ்வாறு கண்டறியப்பட்டுக் கலைக்கப்படு வதாகத் திருச்சி வானொலி நிலைய நேர்முகம் நமக்குத் தெரிவிக்கிறது. இன்றைய இலக்கியங்கள் பெண்ணைக் கவர்ச்சியான வாணிகப்பொருளாக, பாலுணர்வின் கு றி யீ டா கப் படைக்கின்றன. அட்டைப்படம் பெண்ணாகத்தான் இருக்கவேண்டுமென்று இந்த அடிப் கடையில் பத்திரிக்கைகள் முடிவு செய்திருக்கின்றன. ஒரு காலத்தில் உள்ளிருக்கும் கதைக்கும் அட்டைப்படத் திற்கும் தொடர்பிருக்கும். இப்போது தொடர்பே இல்லாமல் அரைகுறை ஆடை உடுத்திய ஒரு பெண்ணை அட்டை காட்டுகிறது. நாவல்கள், சிறுகதைகள் எல்லாம் பெண்ணை ஆணுக்கு அடிமையாகவும், பிள்ளை பெறும் இயந்திரமாகவும், கவர்ச்சிப் பொருளாகவும் காட்டு கின்றன. ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் ராஜம் கிருஷ்ணனின் தோட்டக்காரி'
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/58
Appearance