பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 - இலக்கிய ஏந்தல்கள் போது ஆண் ஏன் சமையல் செய்வதாகக் காட்டப்படக் கூடாது? நளபாகம், பீமபாகம் என்றெல்லாம் ஆண்சமூகம் கொடிபிடித்துக்கொள்ளும் ச ைம ய ல் பணியைப் பெண்ணுக்கே ஒதுக்கியிருக்கிறதே ஏன்? சந்தையில் விற்கும் பொருள்களை எல்லாம் நம்முடைய தொலைக் காட்சி அழகாக விளம்பரப்படுத்த, மாப்பிள்ளைகள் அவற்றை மாமனார் வீட்டில் தேடி, கிடைக்காத சூழ் நிலையில் ஸ்டவ் வெடிக்கிறது. 20ஆம் நூற்றாண்டு அறிவியல் வெடிக்காத ஸ்டவ்களைத் தரமுடியவில்லை. பெண்வளர்ப்பு பொருளாதார நிலையில் நடுத்தரக் குடும்பங்கள் பெண்ணின் வளர்ப்பில் சரியான அக்கறை காட்டுவ தில்லை. ஒரு முழுமையான ஆளுமை உள்ளவனாக உருவாக்கப்படாமல், பெற்றோரும் உறவினர்களும் அவளை வீட்டிற் பதுமையாக, தன்னையே நேசித்துத் தனக்குள்ளே குறுகி விடுபவளாக (narcist) ஆணினத்தை அவாவுபவளாக மாற்றப்படுகிறாள். பளபளப்புக்கு இரையாகிவிடுகிற விட்டில்களாக அவர்கள் இன்றைய இலக்கியங்களில் படைக்கப்படுகிறார்கள். ஜான் லாக் (John Locke) என்பார் கூறுவதுபோல், பண்பு, அறிவு, முறையான வளர்ப்பு இவற்றோடு இறுதியாகக் கல்வியும் அளிக்கப்பட வேண்டும். நம் கல்வி, வளர்ப்புமுறை, இலக்கியப் படைப்புகள் சமுதாயத்தைச் சீரழிக்கவே செய்யும். 'கற்பென்று சொல்லி வைத்தார் அதை இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம்" என்று பாரதி கூறியவாறு நடக்கை நியதிகள் இருவருக்கும் ஒருபடித் தானவை என்பதை இன்றைய இலக்கியப் படைப்புகள் அறிவுறுத்த வேண்டும். நாம் உணர்ச்சிகளுக்கு நம் வாழ்