பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6& இலக்கிய ஏந்தல்கள் துாண்டிக் காகபெறும் வித்தையாக எழுத்தைப் படைக் கின்றனர். நீச்சலுடைக் காட்சியில் ஒரு பெண் வரும் திரைப்படத்திலேயே மற்றொருத்தி முழு ஆடையில் நின்று நாகரிகத்தைப் பேசுகிறாள். தமிழ்ப் பண்பாடு, இந்தியப் பண்பாடு என்பனவெல்லாம் பெண்ணை வீட்டில் பூட்டி வைக்க ஏற்பட்டன அல்ல. தற்காப்பு’ என்ற சொல்லுக்கு இருபதாம் நூற்றாண்டளவில், மனத்தாலும் நினைவா லும் தன்னைக் காத்தல் என்பது மட்டுமன்றி 92-L-6)6.7 விலும் கயமையை எதிர்த்துப் போராடும் திண்மை பெற்றவளாக அவள் மாறுவதை நம் படைப்புகள் காட்ட வேண்டும். ஜான்ஸிராணி சமூகத்தில் எப்போதோ தோன்றும் ஒரு விந்தைப் பிறவி என்ற கருத்து மாறி பெண் வனப்புடையவள் மட்டுமல்லள்; வலிமையும் உடையவள் என்ற கருத்து தோன்ற வேண்டும். இந்திராகாந்தியும், மார்கரெட் தாட்சரும், அக்கினோவும், ஒரு நாட்டின் ஆட்சியைப் பெண்கள் நடத்துவது விந்தைச் செயலன்று என நிறுவியவர்கள். ஆகவே பெண் எல்லாப் பணிகளுக்கும் உரியவள் என்ற மனப்பாங்கை நம் எழுத்தாளர்கள் வளர்க்கவேண்டும். சமூகத்தை மாற்றுக o - ஒரு சமூகத்தின் புத்தெழுச்சிக்கும், மறுமலர்ச்சிக்கும் எழுத்துத் துறை பெரிய துணையாக முடியும். இந் நூற்றாண்டில் இனிவரும் படைப்புகள் பெண்குலத்தின் பெருமை பேசினால் போதாது; அதன் துன்ப நிலைகள் மாறுதற்குரிய வழிவகைகளைக் கற்பிக்கவேண்டும். மாதர் தம்மை இழிவுசெய்யும் மடமை கொளுத்தப்பட - வேண்டும். கைம்மை என்ற பெயரால் பெண்களை ஒதுக்கித்தள்ளி அருவருப்பான சமூக நிலைக்கு