பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.கா. 63 ஆளாக்குதல் கூடாதென்பது வற்புறுத்தப் பெறவேண்டும். நாதசுர வித்வான் மதுரை பொன்னுத்தாயி ஆனந்த விகடனுக்களித்த நேர்முகம் ஒன்றில் தான் கைம் பெண்ணான பிறகு திருமணம் போன்ற மங்கல நிகழ்ச்சி களுக்குத் தான் அழைக்கப்படுவதில்லை எனக் கூறி யுள்ளார். இத்தகைய முடத்தனமான கருத்துகளை இதழ்கள் கண்டிக்கவேண்டும். மறுமணம், எல்லா எழுத்தாளர்களாலும் முழுமனத்தோடு ஏற்கப்பட்டுப் பரப்பப்பட வேண்டும். பெண்களின் மனநிலைகளைப் பல்வேறு சமூகச் சூழல்களிலிருந்து படம்பிடித்து எழுது கின்ற உயிருள்ள எழுத்து உலா வரவேண்டும். (Wundt, Freud, Adler, Juny Jotman Skinner) Geurrgärp மேலை நாட்டு எழுத்தாளர்களைப் போல் உளவியல் பகுப்பாய்வு முறையில் சமூக நாடிகளை ஆராய்ந்து o அவற்றை மாற்றுதற்கும், தீவிரப்படுத்துதற்கும், பெண் களாய் பன்னெறியில் முன்னேற்று தற்கும் நம் எழுத்தாளர் கள் முயலவேண்டும். பருவம் வாரா இளமையில் மணம் என்ற பெயரில் பலிகொடுத்தல் வயது மூத்தவர்க்கு இளம் பெண்களை மணம் செய்துகொடுத்து அவர்களை மீளாத் துயரத்துக்கு ஆளாக்கல், பொன்னும் பொருளும் சொத்தும் உடையவர் எனக் கருதி மற்றவற்றைக் கருதாமல் மணம் செய்தளித்தல், ஆகியன பெண்ணுக்கு வாழ்வளிக்கும் முயற்சிகளல்ல என்பதைச் சமூகம் உணருமாறு எழுத்தாளர்கள் செய்யவேண்டும். நம் கல்விக் கூடங்கள் பெண்களுக்கு உரிமைகளையும், சட்ட அறிவையும், சமூகத்தில் அவர்களுக்குரிய பங்கையும், தீமைகளை எதிர்த்து நிற்கும் உரத்தையும் அளிக்க வேண்டும். பெண்களின் உள்ளக் குமுறல் வெடித்தெழும் இடங்களில் அதற்கு மதிப்பளித்துப் பொறுமையாக