பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுநெறி காட்டிய புலவன் இந்திய தேசிய விடுதலை விழாவினைச் சிறப்பாகக் கொண்டாடுகிறோம். பாரத நாடு அடிமைத் தளையில் கட்டுண்டு கிடந்த அந்நாளில் தமது தேசிய கீதங்களால் நாட்டு மக்களைத் தட்டி எழுப்பிய ஒரு பெரிய கவிஞரின் திருநாளினையும் நாம் கொண்டாடுகின்றோம். i மகாகவி பாரதி சின்னஞ்சிறு வயதிலேயே பாடல்கள் புனையும் கவித்திறம் வாய்க்கப் பெற்றார். எட்டைய புர சமஸ்தானத்தில் அவர் தந்தையார் சின்னசாமி ஐயர் வேலையில் இருந்தார். பெரும் புலவர்களும் பாராட்டும் கவிவன்மை பாரதியிடம் காணப்பட்டதால் பாரதி' என்ற பெயர்-கல்விக்கு அதிதேவதையான சரசுவதியின் பெயர்இவருக்குப் புலவர்களால் வழங்கப்பட்டது. பாரதி வறுமை யிலே வாடிய புலவர்; ஆயினும் வறுமையிற் செம்மை கண்டவர். எந்தச் சூழ்நிலையிலும் நாட்டு விடுதலைக்குப் பாடுபடும் நல்ல குறிக்கோளினை மறவாதவர்; கை விடாதவர். குறிக்கோள் நிறைந்த-பிறருக்குப் பயனளிக் கும்-வாழ்க்கை வாழ்ந்தவர். - இவர் தொண்டுகள் பல திறத்தன. நாட்டிற்கும், மொழிக்கும், பெண் சமூகத்திற்கும் சமுதாயப் பொதுமைக்கும் இவர் ஆற்றிய பணிகள் அளவிடற்கரியன. முதலாவது இவர் நாட்டிற்காக ஆற்றிய நற்பணி களைக் காண்போம். ==