பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 இலக்கிய ஏந் தல்க ள் என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம் என்றுமடியுமெங்கள் அடிமையின் மோகம்? என்றெம தன்னைகை விலங்குகள் போகும்? எனறெம தின்னல்கள் தீர்ந்து பொய் யாகும்? என்று சுதந்திர வேட்கையும் துடிப்புங் கொண்டவர் பாரதியார். கொடுமை பல செய்த அன்னிய ஆங்கில ஆட்சியை நோக்கி அவர் ஆண்மையுரை ஆற்றுவதைக் கீழ்க்காணும் பாடல் வரிகளால் அறியலாம்: நாங்கள் முப்பது கோடி ஜனங்களும் நாய்களோ? பன்றிச்-சேய்களோ? நீங்கள் மட்டு மனிதர்களோ இது நீதமோ பிடி-வாதமோ? என்று கேட்டு, "சதையைத் துண்டு துண்டாக்கினும் உன் எண்ணம் சாயுமோ? ஜீவன் ஒயுமோ?" என்று தம் மாறாத நிலை குலையாத மனவுறுதியைப் புலப்படுத்துகின்றார். வந்தே மாதரம் என்போம்-எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம் என்று பாரத மாதாவை வணங்கும் வாழ்வினை வகையுற எடுத்து மொழிகின்றார். காமிருக்கும் நாடு நமது என்ப தறிந்தோம்-இது நமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம் என்று ஆணித்தரமாகக் கூறி,