பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 இலக்கிய ஏந்தல்கள் பாரதநாடு பழம்பெரு நாடே பாடுவர் இஃதை எமக்கிலை ஈடே என்கிறார். பாரத நாட்டைப் பாடும் பாரதி, தாம் பிறந்த தாய்த்திருநாடாம் தமிழ் நாட்டை மறந்தாரல்லர். செந்தமிழ் நாடெனும் போதினிலே -இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே-எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு - சக்தி பிறக்குது மூச்சினிலே என்று பாடுகிறார். ஆங்கிலம், இந்துஸ்தானி பிரெஞ்சு முதலிய மொழி கள் கற்ற பாரதி, யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று பாடுகிறார். ஷெல்லியின் கவிதையில் பெரும் ஈடுபாடு கொண்ட பாரதி இவ்வுலகிலேயே கம்பர், வள்ளுவர், இளங்கோவைப் போன்ற புலவர்களைக் காணல் அரிது என்று பாடுகின்றார். யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை உண்மை; வெறும் புகழ்ச்சி யில்லை என்கிறார்.