பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

А.амт. 69 "சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே" என்று கூறும் பாரதியார் தமிழ் இலக்கியச் சுவை தேவருலக இன்பத் திற்கு ஈடானது என்கிறார். - தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார். இங்கமரர் சிறப்புக் கண்டார். பொதுவுடமைத் தத்துவம் இக்காலத்தில் பெரிதாகச் சொல்லப்படும் பொது வுடைமைத் தத்துவத்தை (Socialism) அன்றே முழங்கி யவர் பாரதி. பாரதத் தாய் முப்பது கோடி மக்களைக் கொண்டிருந்தாலும் அவளுக்கு உயிர் ஒன்றேதானாம்: பதினெட்டு மொழிகள் பாரத நாட்டில் நிலவினாலும் அவை வெளிப்படுத்தும் சிந்தனை ஒன்றேதான் என்றும் குறிப்பிட்டார். இன்பமோ துன்பமோ, அந்நிலை முப்பது கோடி மக்களுக்கும் பொது என்றார். வாழ்ந்தால் முப்பது கோடியும் வாழவேண்டும்; இன்றேல் முப்பது கோடியும் வீழவேண்டும் என்றார். முப்பதுகோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற வொன்றுடையாள்-இவள் செப்பு மொழிபதி னெட்டுடையாள் எனிற் சிந்தனை ஒன்றுடையாள் எப்பதம் வாய்த்திடுமேனும் நம்மில் யாவர்க்கும் அந்தநிலை பொதுவாகும் முப்பதுகோடியும் வாழ்வோம்-விழில் - முப்பதுகோடி முழுமையும் வீழ்வோம் மேலும், மக்கள் மட்டுமின்றிக் காக்கையும் குருவியும், நீள்கடலும் மலையும் தம் கூட்டமாக. உறவாகக் கண்டவர் பாரதி. 劉 ●・ー5