பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 7 சிந்தனைகளை வளர்க்கின்றது; நம் உள்ளத்தில் குமுறும் உணர்ச்சிகளையும் வெறிகளையும் வெளிப்படுத்தி, அவற்றின் நன்மை தீமைகளை அறிவுறுத்துகின்றது. அவாவறுத்தல், புலனடக்கம், தான் எனும் அகந்தையை ஒழித்தல் ஆகியவற்றை மறைமுகமாக எடுத்துக் கூறி. இறுதியான உறுதிப் பொருளான வீட்டை எய்தவும் அது உதவுகின்றது. - - வீடு என்று ஒன்று, முன்னோர் அறிவுறுத்திச் சென்ற ஒன்று. அதில் கருத்து வேறுபாடுகள் இன்று நிறைய இருப்பினும், வையத்து வாழும் நல்வாழ்விற்கே இன்று இலக்கியம் ஆற்றும் பணி, பெரிது என்பதை யாரும் மறுக்க இயலாது. கலைஞன், அநீதிகளை எடுத்துரைப்பதும், அவற்றை ஒழிக்க வேண்டுவதும், தம் கடமை இல்லை என எண்ணியிருந்த காலமெல்லாம் இன்று மலையேறி, செல்வர் களின் பொழுதுபோக்குக்காக இருந்து வந்த இலக்கியம், இப்போது பெரும்பான்மையான மக்களின் வாழ்விற்குரிய தாகி விட்டது இன்று எழுத்தாளர்களில் பலர் வாழ்க்கைப் போராட்டத்தில் நேராக ஈடுபட்டும், வாழ்க்கைச் சிக்கல் களைத் தம் நூல்களில் சித்தரித்துக் காட்டியும், தொண்டு கள் செய்து வருகின்றனர். குழந்தைகள் மணம் நீக்கவும், விதவைகள் மணம் ஊக்கவும், சாதி நோயைக் களையவும், சமய ஒருமை ஓங்கவும், எல்லார்க்கும் கல்வி, எல்லார்க்கும் உணவு, எல்லார்க்கும் எல்லாம் எனும் பொதுவுடைமைக் கொள்கை பூக்கவும் இன்றைய இலக்கியங்கள் ஆற்றி வரும் பணிகள், உள்ளங்கை நெல்லிக்கனி அல்லவா? தமிழிலக்கியத்தின் பணி கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்திலேயே தோன்றிய தொன்மை இலக்கியம் தமிழிலக்கியம்