பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பr. 73 சமுதாய நோக்கு ஊருக்கு கல்லது சொல்வேன்-எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன் # என்று பாரதி ஓரிடத்தில் குறிப்பிடுவது போன்று, அரிய பல கருத்துக்களைத் தம் பாடல்களில் வழங்கியுள்ளார். ஏழையென்றும் அடிமையென்றும் எவனும் இல்லை ஜாதியில் இழிவுகொண்ட மனிதரென்பது இந்தியாவில் இல்லையே என்று வர்க்க பேதமற்ற ஒரு சமுதாயத்தை (Classless Society) படைத்துக் காட்டுகிறார். முப்பது கோடி ஜனங்களுக்கும் பொதுவான ஒரு சமுதாயத்தை உலகத் திற்கே பொதுவாகப் படைத்துக் காட்டவேண்டும் என்று எண்ணுகிறார் பாரதியார். மேலும் இங்க வாழ்வோர் அனைவர்க்கும் சோறுண்டு; உழைத்தே வாழவேண்டும்; உழைக்காமல் பிறர் உழைப்பில் வாழ்வது திருட்டு என்று பேசுகிறார் பாரதியார். 1 * வயிற்றுச் சோறுண்டு கண்டீர்-இங்கு வாழும் மனிதரெல்லோர்க்கும் - பயிற்றி உழுதுண்டு வாழ்வீர்-பிறர் பங்கைத் திருடுதல் வேண்டாம். தொழில் முன்னேற்றம் பாரதியார் தம்முடைய தொழிலாகப் பின்வருமாறு கூறியிருக்கிறார்: *. நமக்குத் தொழில் கவிதை, காட்டிற்குழைத்தல் இமைப்பொழுதுஞ்சோராதிருத்தல்