74 - - இலக்கிய ஏந்தல்கள் கலைவளமும், இசைவளமும், காட்டுவளமும் மிக வேண்டும் என்பதிலே பாரதிக்கு ஆர்வம் மிகுதி. காவியமே செய்வோம், நல்ல காடு வளர்ப்போம் கலை வளர்ப்போம்; கொல்லர் உலை வளர்ப்போம் ஓவியம் செய்வோம், நல்ல ஊசிக செய்வோம் அன்ன சத்திரம் கட்டுதலினும், ஆலயம் பதினாயிரம் எழுப்புதலினும், ஒர் ஏழைக்கு எழுத்தறிவித்தலே உயர்ந்த அறம் என்று போற்றுகின்றார். ஓயாமல் உழைக்க வேண்டும்; செய்யும் தொழிலில் உயர்வு தாழ்வு இல்லை. இரும்பைக் காய்ச்சி உருக்கிடவேண்டும்; இயந்திரங்கள் செய்திட வேண்டும்; கரும்பைச் சாறு பிழி ந்திடவேண்டும்; கடலில் மூழ்கி முத்தெடுத்திடுதல் வேண்டும் என்று குறிப் பிடுகின்றார். பாரதியாரின் முப்பெரும் பாடல்கள் பாரதியாரின் கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், யில் பாட்டு முதலியன பாரதியாரின் கவிதைச் சிறப்பினை எதிர்காலத்தில் என்றென்றும் பறையறைந்து கொண்டிருக்கும் என்று தமிழறிஞர் கூறுவர். கண்ணனைத் தாயாக, தந்தையாக, தோழனாக, சேவகனாக எண்ணிப் பாரதியார் பாடியிருக்கும் பாடல் கள் எல்லாம். கவிதைக் கனி பிழிந்த சாறுகள் எனலாம். பாரதத் தாய் அடிமைத் தளையில் கட்டுண்டு துன்பப் பட்ட நிலையும், ஒருநாள் அன்னையின் அடிமை விலங்குகள் ஒடிந்து இந்திய மக்களின் இன்னல்கள் திரும் என்பதனைப் பாரதியார் Symbolic) -ஆகப் பாஞ்சாலி சபதத்தில் காட்டுகின்றார். "கட்டுண்டோம்; பொறுத் திருப்போம், காலம் மாறும்" என்று பாஞ்சாலி சபதத்தில்
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/74
Appearance