பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுக்கொரு புலவன் பாரதி நாட்டுக்குத் தந்த கவிதைகள் பல. அடிமைத் தளையில் அல்லலுற்ற பாரதத் தாயை விடுவிக்க நாட்டு மக்கள் உள்ளத்தில் இளர்ச்சி ஊட்டி எழுச்சியூட்டிய பாடல்கள் தேசீய கீதங்கள் பக்தி வலையிற்பட்டுத் தெய்வத்திற்கு ஞானச் சுடர்விளக்கு ஏற்றப் பாடிய பாடல்கள் தெய்வப் பாடல்கள். உள்ளத் தில் ஊறி வரும் உணர்ச்சிப் பெருக்கிலே எழுந்த பிற பாடல்கள் தனிப் பாடல்கள். அவர் தம் சுயசரிதையும் வசன கவிதையும் இதில் அடங்கும். கண்ணனைத் தாயாக, தந்தையாக, காதலியாக, காதலனாக, சீடனாக, சற்குருவாக, குழந்தையாக, விளையாட்டுப் பிள்ளையாக எண்ணிப் பாடிய பாடல்கள் கண்ணன் பாட்டு. பாரதக் கதையின் ஒரு பகுதியாம் பாஞ்சாலி சபதத்திற்குப் புது மெருகும், பொலிவும், வனப்பும், புதுமையும் பூத்துக் குலுங்கப் பாடியதே பாஞ்சாலி சபதம். முன்னிக் கவிதை வெறி மூண்டே நனவழியப் பட்டப் பகலிலே பாவலர்க்குத் தோன்றுவதாம் நெட்டைக் கனவின் நிகழ்ச்சியிலே எழுந்தது குயில்பாட்டு. இவ்வாறு பல்வேறு கோணங்களிலே பல்வேறு மனநிலையிலே பல பொருள் பற்றிப் பாரதியார் பாடியிருக்கின்றார், ' egy 6īł fř தொடாதது ஒன்றுமில்லை; தொட்டதை அழகு படுத் தாமல் விட்டதில்லை என்ற கூற்றிற்கிணங்க பாரதி கையாளாத துறை கவிதையில் இல்லையெனலாம். ஆயினும் இவ்வனைத்திலும் நம் நெஞ்சை ஈர்ப்பன பாரதியின் கண்ணன் பாடல்கள்தான்.