பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 இலக்கிய ஏந் தல்கள் கண்ணனைப் பாடாத கவிஞர்கள் குறைவு. தமிழ் நாட்டுக் கவிஞர்கள் கண்ணனிடம் கொண்ட ஈடுபாடு மிகுதி. கண்ணனைக் குழந்தையாக எண்ணிப் பல பாடல்களைப் பாடியவர் பெரியாழ்வாராகும். பிள்ளைத் தமிழ் என்று தமிழில் பெருகி வளர்ந்த இனியதொரு வகைக்கு வித்துன்றிய பெருமை அவரைச் சாரும். குலசேகராழ்வார் கெளசலை வயிற்றுதித்த இராகவ னுக்குத் தாலாட்டுப் பாட்டுப் பாடினார். அதனை யொட்டிப் பாடிய பெருமை குமரகுருபரர்க்கும் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் பாரதியையும் சாரும். i. 'குழந்தையினுடைய மனநிலையைப் .ெ ப ற ா த எவரும் என் மோட்ச உலகிற்குள் நுழைய முடியாது’ என்றார் ஏசுபெருமான். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே’ என்பது நம் நாட்டுப் பழமொழி. குழந்தையைத் தெய்வமாகவும் தெய்வத் தைக் குழந்தையாகவும் கண்டவர் பாரதி. அப்படிக் கண்ட நிலையிலே பி றந்த கவிதைதான்-பாட்டுத்தான் 'கண்ணம்மா என் குழந்தை' என்பது. "சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’ என்று தொடங்கும் பாட்டு யாவுமாய் எங்குமாய் நீக்கமற நிறைந்திருக்கின்ற பராசக்தியைக் குழந்தையாகக் கண்டு சொல்லிய பாட்டாகும். சிறுகதையின் தொடக்க மும் முடிவும் குதிரைப் பந்தயத்தின் தொடக்கமும் முடிவும் போல விறுவிறுப்பாயிருக்க வேண்டும் என்று சொன் னான் மேலை நாட்டு மேதை ஒருவன். அக் கூற்று, கவிதைக்கும் பொருத்தமுடையதே. அம் முறைப்படி இப் பாட்டின் தொடக்கமே சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா! செல்வக் களஞ்சியமே! என்று தொடங்கு கின்றது. கிளி போலப் பெண் அழகாயிருக்கிறாள்'