80 இலக்கிய ஏந்தல்கள் பாராட்டினார். பேச்சு கேட்பதற்கு இனிமையாயிருக் கிறது. பொன் வண்ணம் உடலுக்கு வனப்பூட்டுகிறது. சித்திரம் காண்பதற்கு மகிழ்வூட்டுகிறது. தெருப்புழுதி யில் அளைந்து விளையாடிய அழுக்குக் கைகளோடு அப்பாவைக் கண்டு ஓடிவரும் குழந்தையாகயிருந்தாலும் கூட அள்ளி அணைத்திடவே ஆசை தோன்றும். கண்ணம்மா ஒடி வருகையில் உள்ளம் குளிருகிறது; ஆடித் திரிகையில் ஆவியே, உயிரே ஒடிப்போய்த் தழுவுகிறது. உச்சியினை முகர்ந்தால் வராத கர்வமும் வந்துவிடுகிறது. கண்ணம்மாவை மெச்சி ஊரார் புகழ்ந்தால் உடம்பு புல்லரிக்கின்றது. கள்ளுண்டு களித்து மயங்கிய நிலை யையே களிப்பு-மகிழ்ச்சியின் போதை நிலை என்பர் தமிழில். அப்படிப்பட்ட நிலைக்குக் கொண்டுசெல்லப் படுகிறார் பாரதி, கண்ணம்மாவைக் கன்னத்தில் முத்த மிடும்போது இவையெல்லாம் இனிய நிகழ்ச்சிகள். இப்பொழுது கண்ணம்மாவின் முகம் சிவந்து விடுகிறது. பாரதியின் நெஞ்சிலே துன்பம் வந்து கொட்டுகிறது. கண்ணம்மாவின் நெற்றி சுருங்கித் துன்பத் திரைகள் கோடிட்டுச் சிணுங்குகிறாள். இதைக் காணப் பொறாத பாரதியின் நெஞ்சு பதைக்கிறது. இறுதியில் குறுகுறுவென அலையும் கண்ணம்மாவின் கோலக் கண்களிலிருந்து ஒன்றிரண்டு நீர்த்துளிகள் வழி கின்றன. இதுகண்ட பாரதியின் நெஞ்சில் இரத்தம் வடிகிறது. இல்லை, இல்லை கொட்டுகிறது. என்கண்ணிற் பாவையன்றோ?-கண்ணம்மா! என்னுயிர் கின்னதன்றோ? - என்று கண்ணம்மாவைக் கண்ணின் பாவையாக, உயிரின் ஊட்டமாக, உறைவிடமாகக் கருதிக் கவிதை வெறியிற் பாடுகின்றார்,
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/80
Appearance