பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- சி.பா. 战卫 இனி, பாரதி கண்ணம்மாவின் சிறப்பினைக் கனிவில் குழைத்துச் சொல்லில் வடிக்கத் தலைப்படுகின்றார். கண்ணம்மா சொல்லும் மழலையிலே துன்பங்கள் எல்லாம் 'பகலவனைக் கண்ட பணிபோல் மறைகின் றன. அவளு டைய முல்லைச் சிரிப்பிலே பாரதியின் மூர்க்கம்-கோபம் ஒடி ஒளிகிறது. ஏடுகளும் சொல்லாத இன்பக் கதைகளை, இன்னும் சொல்லப் போனால் எந்தச் சுருக்கெழுத்துக் காரரும் புலவரும் எழுத முடியாத மொழியிலே, எழுத முடியாத அளவிலே கண்ணம்மா ஆடிப் பாடி உணர்ச் சியுடன் சொல்கின்றாள். - அன்பிலே தெய்வமாய், மார்பிலே வைரமணியாய், - சீர்பெற்று வாழ ச் செல்வமாய்த் துலங்குகிறாள் கண்ணம்மா. - 'குறுகுறு நடை நடந்து, சிறு கை நீட்டி இட்டும் தொட்டும், கெளவியும் துழந்தும் நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்க்கும் குழந்தைச் செல்வத்தின் குன்றாத சிறப்பினை, குறையாத அழகினை நன்றாகச் சொல்லில் வடித்துச் சுவையூட்டி நினைத்தொறும் காணுந்தொறும்’ இனிப்பூட்டும் பாட்டாய்த் தமிழ் மக்களுக்கு அளித் திருக்கிறார் அமர கவி பாரதி. 'பாட்டுக்கொரு ുഖഖ് பாரதியடா’ என்பது கவிமணியின் வாக்கு. அவர் வாக்கு உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை! -