பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 83 உள்ளது. ஒளிவு மறைவின்றி உள்ளது உள்ளபடியே வெளியிடும் அவர் பண்பு பலரும் அறியத்தக்கது. அவருக்கே இயல்பான நகைச்சுவை சுவைத்து மகிழத் தக்கது. 'தமிழைப் பழித்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்’ என்ற தமிழ் வெறி கொண்ட உள்ளம் நாம் அனைவரும் விரும்பிப் பின்பற்றத் தக்கது. காலனுக்குக் கண்ணில்லை; கருணை இல்லை. நமக்கு நற்பேறு இல்லை. கவிஞர் இன்று நம்மிடையே இல்லை. அவர் விட்டுச் சென்ற தமிழ்க் கவிதைப் பேழை திறந்து கிடக்கின்றது. அங்கே எண்ண எண்ணத் தித்திக்கும் வண்ணக் கவிதைகள் உள்ளன. அவற்றை வாரி உண்ணச் சேர வாரும் செகத்திரே என நான் அழைக் கின்றேன். அவர் நமக்கு விட்டுச் சென்றிருக்கும் கவிதை களே நம் சொத்துக்கள். அவற்றைப் படித்து மகிழ வேண்டும்; பாடிப் பாடிப் பரவசப்பட வேண்டும். அவர் கவிதைகள் உலகெங்கும் பரவ நாம் முயற்சி எடுத்துக் கொள்ளவேண்டும். அவர் உலகக் கவிஞர் என்பதை நாம் உலகிற்கு உணர்த்த வேண்டும். ஷேக்ஸ்பியர் சிறந்தார் தமது நாடகம் எழுதும் நற்பண்பால், வேர்ட்ஸ் வொர்த் சிறந்தார் தமது ஈடு இணையற்ற இயற்கையை வடித்துக் காட்டும் திறத்தால். ஷெல்லியும், கீட்ஸும், பைரனும் சிறந்தார்கள் காதல் உலகிற்குக் கவிதை வடித்துத் தந்த சிறப்பால். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சிறந்தார் இவ் வனைத்துத் துறையிலும் எழிலார்ந்த கவிதைகள் வடித்துத் தந்த காரணத்தால். காலத்தின் இடையிடையே ஹோமர், தாந்தோ போன்ற கவிஞர்கள் தோன்றவில்லையாயின் உலகம் அழிந்துபட்டிருக்கும்’ என்றார் கவிஞர் ஷெல்லி.