பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 尋5 குடி கொண்டுள்ளான்” என்று குறிப்பிட்டார் தமிழ்ப் பெரியார் திரு.வி.க. இயற்கையின் இனிய பெற்றியினைப் பாரதிதாசன் பாடியதுபோல வேறு எவரும் பாடவில்லை. சங்கக் கவிஞனுக்குப் பிறகு இயற்கையைப் பாடவந்த தங்கக் கவிஞர் அவர். கவிஞர் கவிதைத் துறையினைக் கைவரப் பெற்றார். எங்கே? கவிஞர் வாக்காலேயே காண்போம்: - காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன் கடற்பரப்பில் ஒளிப்புனலில் கண்டேன் அந்தச் சோலையிலே மலர்களிலே தளிர்கள் தம்மில் தொட்டவிடம் எலாம் கண்ணில் தட்டுப் பட்டாள் மாலையிலே மேற்றிசையில் உருகு கின்ற மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ஆலஞ் சாலைதொறும் கிளைதோறும் கிளியின் கூட்டம் தனிலந்த அழகென்பாள் கவிதை தந்தாள். நிலவைப் பற்றிக் கவிஞர் பாடுகிறார்: அந்தியிரு ளாற்கருகும் உலகு கண்டேன் அவ்வாறே வான்கண்டேன் திசைகள் கண்டேன் பிந்தியக்தக் காரிருள்தான் சிரித்த துண்டோ? பெருஞ் சிரிப்பின் ஒளிமுத்தோ நிலவோ தோன் சிக்தாமல் சிதறாமல் அழகை எல்லாம் சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி இந்தாவென் றேஇயற்கை அன்னை வானில் எழில் வாழ்வைச் சித்திரித்த வண்ணம்தானோ! தென்றற் காற்றினைக் கவிஞர் அவர்கள் லாவகமாக அறிமுகப்படுத்துகிறார். இ.ஏ.-6