பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 இலக்கிய ஏந்தல்கள் அந்தியிலே இளமுல்லை சிலிர்க்கச் செந்நெல் அடிதொடரும் மடைப்புனலும் சிலிர்க்க என்றன் சிந்தை உடல் அணுஒவ்வொன் றும்சி லிர்க்கச் செல்வம் ஒன்றுவரும்; அதன்பேர் தென்றற் காற்று. அடுத்து, காதல் பற்றிக் கவிஞர் காட்டும் காட்சி களைக் கோவையுறக் காண்போம். - காதலியைப் பார்த்துக் காதலன் சொல்கின்றான்: மின்னலிடை கன்னல்மொழி இன்னும் சொன்னால் விரியுலகில் ஒருத்திரீ அழகின் உச்சி. காதலனைப் பற்றிக் காதலி கொண்டுள்ள எண்ணத் தைப் பின்வரும் வரிகள் தெற்றெனத் தெளிவாக்கும்; கண்மூக்குக் காது வாய்மெய் இன்பத்திற் கவிழ்ப்பான் மற்றும் பெண்பெற்ற தாயும் போல்வான் பெரும்பணி எனக்கி ழைப்பான் வண்மையால் கால்து டைப்பான் மறுப்பினும் கேட்பா னில்லை உண்மையில் நான்.அ வன்பால் உயர்மதிப் புடையேன் தோழி. இவ்வாறு ஒருவரை ஒருவர் உணர்ந்து உளம் நெகிழ்ந்து வாழும் வாழ்வில் துன்பமேது? * அப்படித் துன்பம் நேரிட்டாலும் காதலன் த ன் காதலியைப் பார்த்துக் கேட்கின்றான்: துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்கமாட்டாயா! எமக்கு நீ இன்பம் சேர்க்க மாட்டாயா!-நல் அன்பிலா நெஞ்சில் தமிழ்ற்பாடி நீ