பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 87 அல்லல் நீக்கமாட்டாயா?--கண்ணே அல்லல் நீக்க மாட்டாயா? வன்பும் எளிமையும் சூழும் காட்டிலே வாழ்வில் உணர்வு சேர்க்க-எம் வாழ்வில் உணர்வு சேர்க்க-நீ அன்றை கற்றமிழ்க் கூத்தின் முறையினால் ஆடிக் காட்ட மாட்டாயா-கண்ணே நீ ஆடிக் காட்ட மாட்டாயா. கவிஞர் தம் உவமையழகும் சொல்லாற்றும் திறனும் மிகவும் சிறப்பு வாய்ந்தன. ஓர் கிளையில் ஒரு குலையில் தீமை காணில் உயர் குலைகள் அத்தனையும் மறுப்பதுண்டோ? என்றும், - களிப்பின்றேல் இனிப்பருமை யாரே காண்பர்? என்றும் அறிஞர் பாடுவது காண்க. அடுத்து, நம் பாரதிதாசனின் தமிழ்ப்பற்று கட்டுக் அடங்காத ஒன்று. தமிழ்ப்பற்று எனையின்ற தாய்க்கும் தந்தை மக்கள் இனமீன்ற தமிழுக்கும் என்னால் தினையளவு கலமேனும் கிடைக்கு மென்றால் செத்தொழியும் நாள்எனக்குத் திருநாளாகும். எனக் கவிஞர் உவமை வாயிலாகத் தமிழின்பததை விளக்குகின்றார் :