பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§.tary. 9 கின்றது; சமூக அநீதிகளையும், கொடுமைகளையும் அம்பலப்படுத்திச் சமதருமத்தைப் போதிக்கின்றது. தமிழ் இலக்கியமும், அவற்றின் படைப்பாளிகளும் இவ்வகையில் இன்று பெருந்தொண்டாற்றி வருகின்றனர். இலக்கியத்தின் பணி பற்றிய அறிஞர் கருத்துகள் "பூங்காவினைப் போல் அழகும் கவர்ச்சியும் தருவது மட்டுமின்றிக் காய்கறித் தோட்டங்களைப் போல் நல்ல பயனும் தருவதே இலக்கியம்” என்று கூறுகிறார் வில்லியம் டெம்புள் என்ற அறிஞர். சமூகத்திற்குப் பயன்படாத இலக்கியம் வெறும் ஒலிக்கூட்டமே என்று கருதும் ஐ. ஏ. ரிச்சர்ட்ஸ் அவர்கள், "கண்பாடு, சமயம், ஆழ்ந்த கருத்துக்களைத் தருதல், வேகமான உணர்ச்சிகளையும் பலனையும் அடங்கச் செய்தல், வாழ்க்கையின் நன்மை களை மிகுதிப்படுத்தல் இவை எல்லாம் இலக்கியத்தின் பணிகள்" என்று கூறுகிறார். ஆபர்கிராம்பி என்னும் அறிஞரும் அவ்வாறே, "இலக்கியக் கலையைக் கற்பனை யின் துணையோடு ஆக்கும் உலகின் தலையாய குறிக்கோள், நமது வாழ்க்கையில் என்றும் கண்டு, கடைப்பிடிக்க வேண்டிய உயர்ந்த குறிக்கோளை உணர்தற்கே ஆகும்' என இலக்கியத்தின் தலையாய பணியைக் கூறியுள்ளார். நம் இருபதாம் நூற்றாண்டு இணையற்ற கவிஞர் பாரதியாரும், "வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும் கவிபெருக்கும் மேவுமாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெலாம் விழிபெற்றுப் பதவி கொள் வார்' என்று பாடி, இலக்கியத்தின் பணி, பள்ளத்தில்

  • --

வீழ்ந்திருக்கும் குருடரை விழிபெறச் செய்வதே என்பை து