90 இலக்கிய ஏந்தல்கள் கவிதை. அழகும் ஆழமும் பொருளுணர்ச்சியம் வசன கவிதைகளில் கொப்புளிக்கின்றன, "கெண்டைகள் துள்ளி விளையா y நீரின் - அடிமட்டத்தில் அள்ளி நுகர்வன இன்பத்தை' "நாமும் அங்கு இன்பம் நுகர்வோம் அடடா, நாம் மீன்களல்லவே,' "கண்ணிமைப் போது நான் நீருக்குள் ஒளிந்து கொள்கிறேன் பிற்பகுதியும் கேள்:” "நிறுத்துங்கள்! முற்பகுதியே என்பாதி உயிரைப் போக்கிவிட்டது." "மாற்றிச் சுவைக்கும் நான்கு விழிகள் தம்மிற் பிரியாமல் நீராடின்." நகைச் சுவை நகைச்சுவையோடு கவிதையினைக் கையாள்வதில் பாரதிதாசன் தனிச்சிறப்புப் பெற்றவர். தனியே அவரோடு உரையாடிய பேறு பெற்றவர்கள் இதனை நிச்சயம் உணர்ந்திருப்பர். இயற்கையை வருணிக்கு முகத்தான நகைச்சுவையினை நயம்படக் கையாளு கின்றார் கவிஞரேறு. - - கிளையினிற் பாம்பு தொங்க விழுதென்று குரங்கு தொட்டு விளக்கிணைத் தொட்ட பிள்ளை வெடுக்கெனக் குதித்த தைப்போல்
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/90
Appearance