பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளைதோறும் குதித்துத் தாவிக் கீழுள்ள விழுதை யெல்லாம் ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி உச்சிபோய்த் தன்வால் பார்க்கும் கவிஞர் அவர்களின் முதற்பாட்டு. எங்கெங்கும் காணினும் சக்தியடா ஏழ்கடல் அவள் நிற வண்ணமடா என்ற பாட்டாகும். அம் முதற் பாட்டிலேயே கவிஞர்தாம் கவிதையுலகின் முடிசூடா மன்னன் எனக் கட்டியம் கூறி விட்டார். * அவர் பாடிய திராவிட நாட்டுப் பண் இனவுணர்வுக் கும் எழுச்சிக்கும் வித்திட்டது. - வாழ்க வாழ்கவே வளமார் எமதுதி ராவிடநாடு வாழ்க வாழ்கவே என்று தொடங்கும் பாடல் நம் நாட்டுப்பாடலாகும். நான்தான் திராவிடன் என்று நவில்கையில் தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்!" என்று இனவுணர்வு ததும்ப இறுமாப்போடு பாடுகின்றார் கவிஞர். திராவிடத்தின்-திருவிடத்தின் மறுமலர்ச்சிக்கு வழிகோலுகிறார்.