பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதிதாசனும் சுற்றுச்சூழல் - விழிப்புணர்வும் கவிஞர்களெல்லாம் இயற்கையின் காதலர்கள். விரிந்த வானைப்போல் உள்ளம், அருவியைப்போல் சோம்பலற்ற இயக்கம், மலையைப்போன்ற பெருமிதம், து.ாய காற்றைப்போல் சிந்தனைகள், நிலத்தைப்போல் பொறுமை என்று இயற்கையின் கூறுகளில் மனிதர்க் காகும் உயர் பண்புகளைக் காண்பர். பாவேந்தர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இயற்கையிலும் இயற்கை அளிக்கும் இன்ப வாழ்விலும் ஈடுபாடுமிக்கவர். ஆகவே சுற்றுச் சூழலைக் குறித்துப் பாவேந்தரின் பாடல்களில் பன்முக ஆய்வுமேற்கொண்டு இக்கருத்தரங்கில் அறிஞர்கள் கட்டுரை அளித்துள்ளமை மிகப்பொருந்துவதொன்றாகும். சங்ககாலத்திலிருந்தே வாழ்க்கையை இயற்கையோடு பிணைத்துப்பார்க்கும் ஒரு நோக்கு தமிழ்க்கவிஞர்க்குண்டு. ஒவ்வொரு நிலத்திற்கும் அதனைச் சார்ந்த மரம் செடி, கொடி, புள்ளினம் எனக் கருப்பொருளை உரிமையாக்கும் சூழலைச் சங்க இலக்கியங்களில் காண்கிறோம். இத்தகை ஒரு மரபைப் பிற்காலக் கவிஞர்களில் பாரதிதாசன் மிக அழுத்தமாக எடுத்துரைக்கின்றார். மனிதர்கள் எங்கு நல்லவர்களாக இருக்கின்றார்களோ அங்கே நிலமே நீயும் நல்லை என்பர் ஒளவையார். "வள்ளி கீழ்வீழா வரை மிசைத்தேன் தொடா மலைவாழ்நர் அல்ல புரிந்தொழு கலான்" என்று கூறி இந்த மலையில் வாழ்பவர்கள் தியன செய்தொழுகுவதால் இங்கே கிழங்கு வேர்விடாது; மலை மீது தேன் சமையாது என இயற்கையே மனிதர்களின்