பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 இலக்கிய ஏந்தல்கள் மனநிலைக்கேற்ப அமையும் என்பதைக்காட்டுவர். மனிதர் கள் இயற்கைச் சூழல் கெடாவாறு நல்ல ஒழுகுநெறியை மேற்கொளவேண்டும். கம்பனுக்கு ஆறு சான்றோரின் கவி யெனக் காட்சியளித்தது. அழகு, பயன், தெளிவு, குளிர்ச்சி ஒட்டம் ஆகியவை ஆற்றின் தகுதிகளாக அக்கவிஞனாற் காட்டப்பெறும். பாவேந்தர் ஆறளிக்கும் பயனை, நோய்தீர்ந்தார்! வறுமை தீர்ந்தார் நூற்றுக்கு நூறு பேரும்! ஓய்வின்றிக் கலப்பை தூக்கி உழவுப்பண் பாட லானார் சேய்களின் மகிழ்ச்சி கண்டு சிலம்படி குலுங்க ஆற்றுத் தாய்நடக் கின்றாள் வையம் தழைக்கவே தழைக என்றே! ஒர் ஊரின் தூய்மைக்கும், நோயின்மைக்கும் அங்குள்ள நீர்நிலையின் துாய்மை இன்றியமையாதது. உண்னும் உணவை விளைக்கும் முதலாகவும், பருகும் நீராகவும் அமைவதனை :ாழ்வின் உயிர்த்தேவை என்லாமே! ஆகவே பாவேந்தர் வளர்த்துப்பேனும் தாயென ஆற்றைக் கண்டார். இன்று ஆற்றிடையே ஊரின் சாக்கடைகள், கழிவுவுநீர்க் க ல் க ள் கலக்கின்றன. கங்கையும், கங்கையிற் புனிதமாய காவிரி யும் மாசுண்ட மேனியோடு நடக்கின்றன. ஆறுகள் பல வற்றில் தொழிற்சாலைகளின் நச்சுக்கழிவுகள் புகுகின்றன. ஆற்று மணல் "உரித்தநற் றாழம் பூவின் நறும்பொடி உதிர்த்தது" போல இருக்குமெனப் புரட்சிக் கவிஞர் கூறு மாறு இல்லை. இருகரைவாரமும் திருமகள் உறையுளாப் பண்ணும் இப்புண்ணிய தாமிர வருணி” என மனோன் மணிய ஆசிரியர் கூறியுள்ளவாறு ஆற்றின் நிலை இன்று இல்லை. ஆற்றின் உயரிய கரைகள், கரைகளில் மரங்கள், மரங்களில் பறவைகள் எனப் பாவேந்தரின் ஆற்றுக் காட்சி அமைகிறது. இத்தகைய சுற்றுச் சூழலமையுமாறு இயற்கைக்கு நாம் அரண்செய்தல் வேண்டும்,