பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96. இலக்கிய ஏ ந்தல்கள் குயில்கூவிக் கொண்டிருக்கும் கோல மிகுந்த மயிலாடிக் கொண்டிருக்கும் வாசம் உடையநற் காற்றுக் குளிர்ந்தடிக்கும்; கண்ணாடி போன்ற நீர் ஊற்றுக்கள் உண்டு; கனிமரங்கள் மிக்க உண்டு என்று காவேந்தர் கூறுகின்றவாறு காட்டின் எழில் சுற்றுச் சூழலின் மாசு துடைத்து மனித சமூகத்தை நோய் அண்டாமல் பாதுகாக்கவல்லது. புறாக்கூடுகளாக வீடு களைக் கட்டிக்கொண்டு, குளிர்சாதனப் பெட்டிகளின் மின் காற்றிடம் அடைக்கலம் புகுந்து அதில் ஏற்படும் சலிப்பில் மெரினாவில் காற்றுவாங்கக் காத்திருக்கும்போதுதான் காற்று வசதிமிக்க சூழலின் தேவை நம் கவனத்திற்கு வருகிறது. காத்து வாங்க பீச்சுப் பக்கம் காத்திருக்கும் கூட்டமே நேத்து வாங்கிப் போன காத்து என்ன ஆச்சு வீட்டிலே’ என்று கண்ணதாசன் இந்த வாழ்க்கைச் சூழலை எள்ளி நகையாடுகிறார். பாவேந்தர் இயற்கை யளித்த சூழற் கொடையினை எண்ணி எண்ணி வியக்கிறார். விரிந்த வானே, வெளியே-எங்கும் விளைந்த பொருளின் முதலே திரிந்த காற்றும் புனலும்-மண்ணும் செந்தீ யாவும் தந்தோய் தெரிந்த கதிரும் நிலவும்-பலவாச் செறிந்த உலகின் வித்தே புரிந்த உன்றன் செயல்கள் எல்லாம் புதுமை! புதுமை! புதுமை! என்று போற்றுகின்றார். காற்றை நோக்கிக் கவிஞர் கூறும் "உன்னிடம் அமைந்திருக்கும் உண்மையின் விரிவில் மக்கள்