பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 97 சின்னதோர் பகுதியேனும் தெரிந்தார்கள் இல்லை" என்ற கூற்றை நாம் நினைக்கவேண்டும். வீடு, வாழும்தெரு, ஊர், நாடு என்று ஒவ்வொரு நிலையிலும் சுற்றுச்சூழல் இனிதமைய விழிப்புணர்வு வேண்டும். இருண்ட வீடு' என்ற நூலில் புரட்சிக் கவிஞர் இதனை அழகாகக் காட்டுகின்றார். - வீட்டினுள் காற்று வீசுங் தோறும் மோட்டு வளையில் மொய்த்த ஒட்டடை பூமழை யாகப் பொழியும் தலையில்! ஊமைக் குப்பைகள் உம்மென்று மேலெழும்! இப்படி ஒரு வீடிருக்குமானால் என் செய்வது? குடும்ப விளக்கில் இல்லத்தலைவி தங்கம் நாள்தோறும் வீட்டின் செம்மை பேணுகின்றாள்; ஒட்டடை அடிக்கின்றாள்; பெயர்ந்த காரை பூசுகின்றாள். பனித்துளி மணிகள் காய்க்கும் பசும்புற்கள் அடர்புலத்தில் தனித்தனி அகலா வண்ணம் சாய்ந்திட்ட பசுக்கள் எல்லாம் தனக்கொன்று பிறர்க்கொன்று என்னாத் தன்மையால் - புல்லை மேயும் என்று சிற் றுாரின் சூழல் காட்டுவர். பசுக்கள் மேயப் புல்வெளி பரந்த நிலமுண்டு சிற்றுாரில்! அவற்றைக் காலாற மேய்த்தலும் ஒடும் நீரிற் குளிப்பாட்டலும் உண்டு அங்கே! நகரில் கட்டுத்தறி பெயராத மாடுகளிடையே வைக்கோற் கன்று காட்டி வரவழைக்கும் பாலினால் மனிதர்கட்கு நோய் மலிகிறது. இடநெருக்கடியைத் தவிர்க்கின்ற வகையிலும் இயற்கைச் செந்நெறி குலையா வண்ணமும் நகரமைப்பு வேண்டும். நச்சுப் புகை கக்கும் ஊர்திகளும், கொசுப் பண்ணைகளாக விளங்கும் குட்டை