பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 இலக்கிய ஏந்தல் களும், குப்பை கூளம் மலிந்த தெருக்களும், தொழிற் சாலைக் கழிவுகளும் நம் சுற்றுச் சூழலைக் கெடுத்து நோய் களை உருவாக்க வல்லன. ஓஸோன் என்ற இயற்கைக் காற்று வெளி மண்டிலத்தின் இனிய கொடை நலிவுறாத வாறு நாம் பேணிக்கொள்ளவேண்டும். இல்லையெனில் எதிர்கால மானிடச் சாதி முழுவதும் மருத்துவமனைகளில் நிலையாகக் குடியேறும். "வஞ்சகம் சேர் சின்ன மானிடச் சாதிக்கு வாய்ந்த நிலை இதுவோ" என்று பாவேந்தர் கூறுமாறு நம் நிலை ஆகும். எண்ணங்கள் போல்-விரி வெத்தனை! கண்டாய்-இரு கண்ணைக் கவர்ந்திடும் ஆயிரம் வண்ணங்கள் கூடிச் சுடர்தரும் வான்! என்பதுபோல் பரந்த வான்வெளியைக் கருமா முகிற்குலம் தோய காற்றின் ஊஞ்சலில் மழைக்கம்பி பிடித்து இறங்க, அதனால் வையகம் வாழ நாம் சுற்றுச் சூழலைப் பேணு Gaurrunsrål "Nature never did betray. The heart that loved her. It is her privilege through all the years of our life to lead from ioy to ioy" என்று கவிஞர் வோர்ட்ஸ்வொர்த்து கூறியவண்ணம் இயற்கைத்தாயின் இனிய மடியில் நாம் இன்புறுவோமாக!