பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதிதாசன் பாடல்களில் இயற்கை இவள் என்று பிறந்தவள் என்று உணரமுடியாத இயல்பினளாய்த் தமிழ்த்தாய் இலங்குகின்றாள். சுருங்கச் சொன்னால் முன்னைப் பழமைக்கும் பழமையாகவும் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய்த் தமிழ்மொழி வீறுடன் விளங்குகின்றது. முப்பது நூற்றாண்டுக் காலமாக முறையாக வளர்ந்துவரும் தமிழ் இலக்கியம் இறைவன், இயற்கை, பெண்மை என்னும் மூன்று பொருள்கள் பற்றிச் சிறப்பித்துப் பேசுகின்றது. - தொல்காப்பியனார் முதற்பொருள் என்று நிலத்தினை யும் பொழுதினையும் சுட்டுவர். கருப்பொருள் என்று தெய்வம் முதலான பதினான்கு பொருள்களைக் குறிப்பிடுவர். உரிப்பொருள் என்று நிலவொழுக்கத்தைப் பேசுவர். வாழ் முதற் பொருளாக நிலத்தினையும் பொழு தினையும் தொல்காப்பியனார் சுட்டியிருப்பதில் ஒர் உண்மை பொதிந்திலங்குகின்றது. இயற்கை என்னும் பின்னணி இல்லாமல் மனித வாழ்வு துலங்கியதில்லை எனலாம். மேலை நாட்டுக் கவிஞராம் வேர்ட்ஸ்வொர்தி இயற்கையில் ஈடுபாடு கொண்டு பாடிய கவிஞராவர். இயற்கையே எழுதுகோல் பிடித்து அவருக்காக எழுதியது arairuri. (Nature itself wrote for him) su Glavni apsisorror சங்கத்தமிழ்ப் புலவர்கள் பலரும் இயற்கையில் தோய்ந்து பாடல்கள் எழுதியவர்களாவர். சங்கப் புலவர்களைப்