பக்கம்:இலக்கிய தீபம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குறுந்தொகை 93 ளாக வுள்ளோம். முதலாவது, அவர்க்குக் கிடைத்த பிரதி களின் நிலைமையே பிழைகள் பலவற்றிற்குக் காரணமா யுள்ளது. இரண்டாவது, குறுந்தொகையின் நயத்தைத் தமிழ் மக்கள் ஒருவாறு உணரும்படியாகச் செய்தனர். மூன்றாவது, தமிழறிஞர்களுடைய உள்ளத்தைக் குறுக் தொகைத் திருத்தத்தில் ஈடுபடும்படியாகச் செய்தனர். நான்காவது, குறுந்தொகைக்கு நல்ல பதிப்பு வெளிவர வேண்டுமென்ற அவா தமிழ் நாடெங்கும் உண்டாகும்படி செய்தனர். ஒரு சில பதிப்புக்கள் சிற்சில இடங்களில் திருத் தம் பெற்று வெளிவருவதற்கும் காரணமா யிருந்தனர். இவ்வாறு பெருநன்மைகள் பல உண்டாவதற்கு அரங்கனார் காரணமாயிருந்தன ரென்பதை யெண்ணுந்தோறும் அவர் பாற் கெளரவம் பெருகித் தோன்றுகிறது. இப்பொழுது கூட, அரங்கனார் பதிப்பு ஒருவாறு பயன்படுகிறதென்றே சொல்லவேண்டும். பதிப்பாளர் கடமையை நன்குணர்ந்தவ ரானமையினாலே ஏட்டுப் பிரதிகளின் நிலைமைகளையெல்லாம் அங்கங்கே கூறிச் செல்வர். இவ்வாறு எழுதுவதனாலுண் டாம் நன்மையைப் பதிப்பாளர் தொழிலில் ஈடுபட்டவர்கள் நன்குணர்வார்கள். ஓர் உதாரணத்தால் எனது கருத்தை விளக்குகின்றேன். குறுந்தொகை 266-வது செய்யுளை யெடுத்துக்கொள்க. இச் செய்யுளைக் குறித்து 'இப்பாட்டு ஆறடியினதாதல் உணர ஒரு பிரதியில் 4, 5 அடிகளுக்கு, இடம் விடப்பட்டிருக்கிறது' என்று அரங்கனார் எழுது கின்றார். பின்னர், 1930-ல் 'கலா நிலயத்'தில் குறுந் தொகையைத் தாம் நூதனமா யெழுதிய உரையுடன் ஓர் அறிஞர் பதிப்பித்தனர். அப்பதிப்பில் அரங்கனாரது குறிப்பை அறவே மறந்து விட்டனர். செய்யுளிற் குறையுள்ள தென்ப் தனை ஓராற்றானுங் குறித்தல் செய்யாது உரையெழுதிச் சென்றனர். சில காலத்திற்குமுன் குறுந்தொகையை யான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/102&oldid=1481702" இலிருந்து மீள்விக்கப்பட்டது