பக்கம்:இலக்கிய தீபம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

96 இலக்கிய தீபம் வரே யாதல் சாலும். ஆகவே குறுந்தொகையும் அகநானூ றும் முறையே தந்தையும் மகனாரும் தொகுத்தனராதல் வேண்டும். இவர்கள் அந்தணரா அல்லது வேளாளரா என்ற வினாவிற்கு விடையிறுத்தல் எளிதன்று. கிழார் என்ப தனை நோக்கினால் வேளாளரென்று கொள்ளுதல் வேண்டும்; சன்மன் என்பதனை நோக்கினால் அந்தணரென்று கொள்ளு தல் வேண்டும். ஆனால் 'சன்மன்' என்பது 'ஜத்மந் என்றதன் தமிழ் வடிவென்று கொள்ளின், இவர்கள் வேளாளராகவே இருத்தல் கூடும். அகநானூற்றுக்கு நெடுந்தொகையெனப் பெயருண்மை கற்றாரறிவர். தந்தை தொகுத்ததனைக் குறுந்தொகையென வும் மகனார் தொகுத்ததனை நெடுந்தொகையெனவும் வழங்கினா ரென்றல் ஒருவகையாற் பொருத்தமுடையதேயாம். இரண்டு ஆசிரியர்கட்கும் உள்ள தொடர்பு அவர்கள் தொகுத்துள்ள நூற்பெயர்களிலும் விளங்குதல் அமைதியுடையதே. சம காலத்திலேனும் அல்லது மிக அண்ணிய காலத்திலேனும் இருநூல்களும் தொகுக்கப்பட்டமை மேலைத் தொடர்பும் விளக்குகின்றது. இவ் இரண்டு நூல்களில் நாலடிச்சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் உடையது குறுந்தொகை ; 13 அடிச்சிற்றெல்லையும் 31 அடிப் பேரெல்லையும் உடையது நெடுந்தொகை. 9 அடிச்சிற்றெல்லையும் 12 அடிப் பேரெல் லையும் உடையது நற்றிணை. இந்தற்றினை தொகுக்கப் பெற் றது குறுந்தொகைக்கு முன்னோ பின்னோ என்று தெளிதற் சூரிய பிரமாணங்கள் கிடைக்கவில்லை. இவ்வகப்பொருள் நூலும் குறுந்தொகையினை யடுத்தே தொகுக்கப்பெற்றிருத் தல் வேண்டும். இங்குக் கூறிய பல விஷயங்களும் முந்திய கட்டுரையிலும் தந்துள்ளேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/105&oldid=1481705" இலிருந்து மீள்விக்கப்பட்டது