________________
குறுந்தொகை 97 தொகை நூல்களுட் பெரும்பாலன பாண்டியர்களால் தொகுப்பிக்கப்பட்டனவெனத் தோன்றுகிறது. ஐங்குறு நூறும், பதிற்றுப்பத்தும், சேரர்களாலே தொகுப்பிக்கப் பட்டன. சோழ அரசர்களால் தொகுப்பிக்கப்பட்டதாக யாதொரு தொகை நூலும் காணப்படவில்லை. ஆனால் திட்டமாகச் சொல்லுதற்குரிய ஆதாரமொன்றும் நமக்குக் கிடைக்கவில்லை. 2 குறுந்தொகையின் காலத்தை இனி ஆராய்ந்து கூறலா மென்று எண்ணுகிறேன். குறுந்தொகையின் காலமென்ப தில் இரண்டு வேறு வேறு கருத்துக்கள் உள்ளன. ஒன்று இந்நூல் தொகுக்கப்பட்ட காலம் ; பிறிதொன்று இந் நூற் செய்யுட்கள் இயற்றப்பட்ட காலம். இரண்டற்கும் யாதோரியைபும் இல்லை. எனது கருத்தினை ஓர் உதாரணத் தால் விளக்குகிறேன். பன்னூற்றிரட்டு என்னுந் தொகை நூலைப்பற்றித் தமிழ்கற்றா ரனைவரும் அறிவர். இது சில வருடங்கட்கு முன்னர் ஸ்ரீபாண்டித்துரைத்தேவரவர்களால் தொகுக்கப்பட்டது. ஆனால், இதன்கண் அடங்கிய செய் யுட்களோ எனின், வெவ்வேறு காலத்திருந்த பலவேறு ஆசிரியர்களால் இயற்றப்பட்டன. இதனையொத்து இரண்டு வெவ்வேறு ஆராய்ச்சிகள் தொகை நூல்களின் காலவரை யறை குறித்துச் செய்ய வேண்டுவனவா யுள்ளன. இதனை நாம் நன்றாக மனங்கொள்ளுதல் வேண்டும். ஒன்றனைப் பிறிதொன்றனோடு மயங்கவைத்தல் கூடாது. தொகுத்தது குறிப்பிட்ட ஒரு காலத்தாதல் வேண்டும்; செய்யுட்கள் இயற்றியதோவெனின், பற்பல காலங்களி லாகலாம். இக்காலத்துப் பதிப்பாளர் சிலர் ஒரு பொருள் பற்றிப் பல ஆசிரியர்கள் பல நோக்குப்பற்றி ஆராய்ந் இ. தீ.7