பக்கம்:இலக்கிய தீபம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

98 இலக்கிய தீபம் தெழுதிய கட்டுரைகளைத் தொகுத்து வெளியிடுதலைக் காண் கின்றோம். இத்தொகையை 'Symposium' என ஆங் கிலத்தில் வழங்குவச், இசுனைப் போன்றே ஏககாலத்திலே இயற்றித் தொகுக்கப்பட்டனவாக, கடைச்சங்கத்துத் தொகை நூல்கள் இருத்தல் கூடாவோ என்று சிலர் ஆசங் கித்தன் கூடும். ஆனால் உற்று கோக்கின், இவ் ஐயுதவிற்கு இடமில்லை யென்பது தெளிவாம். இவ்வகை நூ ல்கள் தோன்றுதற்குரிய நிலைமை யுண்டாதல் முற்காலத்து அருமை யாம். ஏககாலத்தில் சங்கத் தொகை நூற்புலவர்களனைவரும் இருந்தனரென்று கொண்டாலும், அவர்கள் பல இடங் களில் வாழ்ந்துவந்தவர்கள். அவர்கள் முயற்சிகளை ஒருமுகப் படுத்துதற்குரிய சௌகரியங்கள் முற்காலத்தில் இல்nைc. உண்மையில் அவர்கள் ஏககாலத்து வாழ்ந்தவர்களுமல்லர். ஒரு சில புலவர்கள் தம் காலத்திற்கு முன்பு வாழ்ந்த புலவர்களையும் அவர்கள் சரித்திரங்களையும் குறித்துப் பாடி விருக்கின்றனர். வெள்ளிவீதி போல நன்றும் (அகம். 147) செலவயர்ந் திரினால் யானே இச்செய்யுளைப்பாடிய ஔவையாச் வெள்ளிவீதியாரது சரித்திரம் பற்றிப் பாடியமை கவனிக்கத் தக்கது. இவ் இரு புலைர்களும் இயற்றிய செய்யுட்கள் சில காம் ஆராய்ந்து வரும் குறுந்தொகையிலும் காணப்படுகின்றன. காலே பரிதப் பினவே கண்ணே; நோக்கி நோக்கி வாளிழந் தனவே ; அகலிரு விசும்பின் மீனினும் பலரே மன்றஇவ் வுலகத்துப் பிறரே (குறுந்.44) இந்த அழகிய செய்யுளைப் பாடியவர் வெள்ளிவீதியே. உள்ளின் உள்ளம் வேமே ; உள்ளாது இருப்பின்எம் அளவைத் தன்றே; வருத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/107&oldid=1481707" இலிருந்து மீள்விக்கப்பட்டது