பக்கம்:இலக்கிய தீபம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

100 இலக்கிய தீபம் களால் பாடப்பட்டவர்கள் ஒரு காலத்தாரல்லர்; ஒரு குலத்தா ரல்லர்; ஒரு சாதியா ரல்லர்; ஓரிடத்தாருமல்லர். பாடியவர்களும் இத்தன்மையரே' என்ற பொருள் பொதிந்த வாக்கியம் வரையப்பட்டுள்ளமை நோக்கத்தக்கது. தொகை நூல்களின் காலவரையறைபற்றிப் பொதுப் படப் பேசும் இந்தச் சந்தர்ப்பத்திலே ஆராய்ச்சியாளர் கொண்டிருக்கும் பிறிதொரு கொள்கையையுஞ் சிறிது ஆராய்தல் நலம். நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு என்ற ஐந்து தொகை நூல்களி லும் வருங் கடவுள் வாழ்த்துச் செய்யுட்கள் பாரதம் பாடிய பெருந்தேவனார் இயற்றியன. எனவே, இப்பெருந்தேவ னாரே இவற்றைத் தொகுத்தவராதல் வேண்டும் என்பர் ஒருசிலர். பெருந்தேவனாரை 9-ம் நூற்றாண்டினராகக் கொண்டு, தொகை நூல்களும் அக்காலத்தில் தொகுக்கப் பெற்றனவென்றுங் கொள்ளுவர். இது சிறிதும் பொருந் தாமை எளிதில் உணரலாம். ஒருவர் இப்பொழுது சில தொகை நூல்கள் தொகுப்பதாக வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு தொகை நூலுக்கும் கடவுள் வாழ்த்தாக அப்பர்- திருப்பாட்டுக்களின்றும் ஒவ்வொரு செய்யுளை எடுத்துச் சேர்த்திருப்பதாகவும் கருதிக்கொள்க. கடவுள் வாழ்த்துக் கள் அப்பர்சுவாமிகள் செய்தருளியன என்ற ஒரு காரணம் பற்றி இத்தொகை நூல்கள் யாவும் அச் சுவாமிகள் தொகுத் தனவென்று கூறுதல் பொருந்துமா? இதுபோன்றதொரு கூற்றே பெருந்தேவனார் தொகுத்தாரென்று கூறுவதும். ஐந்து தொகை நூல்களிலும் அப் பெருந்தேவனாரது செய் யுட்கள் காணப்படுதல்பற்றி இம்முடிபுக்கு வருதல் ஒரு சிறிதும் தகாது. கபிலர் என்னும் புலவரது செய்யுட்கள் பரிபாடலொழிய ஏனைத் தொகை நூல்களனைத்தினும் வந் துள்ளன. இதுபற்றிக் கபிலர் இத்தொகைகளைத் தொகுத்தா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/109&oldid=1481709" இலிருந்து மீள்விக்கப்பட்டது