பக்கம்:இலக்கிய தீபம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குறுந்தொகை 101 ரென்று கூறுதல் பொருந்துமா? அன்றியும் முழுவதும் கிடைத்துள்ள தொகைநூல்களிற் காணப்படும் இறுதிக் குறிப்பில் தொகுத்தாரும் தொகுப்பித்தாரும் கொடுக்கப்பட் டுள்ளமை யாவரும் அறிவர். இவ் இறுதிக் குறிப்பினைக் கற்பிதமென்று தள்ளுதற்குக் காரணம் யாதும் இல்லை. இக்கூறிய காரணங்களால் பெருந்தேவனார் தொகை நூல் தொகுத்தாரென்னுங் கொள்கை அறவே விலக்குண்டொழி கின்றது. இனி, குறுந்தொகை தொகுக்கப் பெற்றுள்ள காலத்தை நோக்குவோம். இந்நூலுக்கு உரைவகுத்தார். பேராசிரியர் என்பது முன்னே கூறப்பட்டது. 'ஒட்டக் கூத்தர் உலாப் பாடியபோது பேராசிரியர் நேமிநாதர் பட் டோலை பிடிக்கப் பாடியது' என்று தமிழ் நாவலர் சரிதை கூறுதலின், பேராசிரியர் ஒட்டக்கூத்தர் காலத்தினரென்பர். இது பொருந்தாது. ஏனெனின், இங்குக் குறிக்கப்பட்டவர் பேராசிரியர் கேமிநாதரே யன்றிப் பேராசிரிய ரல்லர். இளம்பூரணர் முதலாயினார்க்கும் நன்னூலார்க்கும் இவர் பிற்பட்டவரென்பது இவரது உரையால் தெளிவாகின்றது. எனவே, இவரது காலம் 14-ம் நூற்றாண்டென்றே கொள் ளத் தகும். இதனால் குறுந்தொகை 14-ம் நூற்றாண்டிற்கு முன்பே தொகுக்கப்பெற்றுள்ளமை தெளிவாம். இனி, தொல் காப்பியத்திற்கு முதல் உரைகாரராகிய இளம்பூரணவடிகள் தமது பொருளதிகார வுரையிலே (களவியல், 12, உரை) "ஓம்புமதி வாழியோ' என்னும் குறுந்தொகைச் செய்யுளைத் தந்து (235) 'இக்குறுந்தொகைப் பாட்டு தலைவன் வரைவிடை வைத்துச் சேறுவான் கூறியது ' என்றெழுதினர். எனவே இளம்பூரணர் காலத்திற்கு முன்பே குறுந்தொகை தொகுக் கப்பட்டிருந்தமை நன்கு விளங்குகின்றது. இவ் உரைகாரர் காலம் 12-வது நூற்றாண்டெனக் கொள்ளுதல்தகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/110&oldid=1481710" இலிருந்து மீள்விக்கப்பட்டது