பக்கம்:இலக்கிய தீபம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குறுந்தொகை 103 நூற்றாண்டின் பிற்பகுதியில் தொகுக்கப் பெற்றதெனக் கொள்ளுதல் தக்கதாகின்றது. நமக்குக் கிடைத்துள்ள ஆதாரங்களனைத்தும் இம்முடி பினையே வலியுறுத்துவனவாம். தமிழிலக்கியச் சரிதப் போக்கும் நிச்சயமாய்த்தெரிகின்ற சரித்திர விஷயங்கள் முதலியனவும் இம்முடிபினையே கொள்ளும்படி வற்புறுத்து கின்றன. இதனோடு ஒருபுடை யொத்துச்சென்று வேறு வகையான முடிபிற்கு நம்மை யுய்க்கின்ற ஒரு சில பிர மாணங்களும் இல்லாமற் போகவில்லை. மேற்காட்டிய கள வியலுரையின் பிற்பகுதி இத்தகைய பிரமாணங்களுள் ஒன்றாம். அதனை ஆதாரமாகக் கொள்ளின், கடைச்சங்கப் புலவராகிய நக்கீரரும் இக்காலத்து வாழ்ந்தவரென்று கொள்ளப்படுதல் வேண்டும். இவ்வாறு கொண்டு கடைச் சங்ககாலமும் 5-ம் நூற்றாண்டின் தொடக்கமென முடிபு காட்டிய அறிஞருமுளர். ஆனால் இதற்குக் காட்டும் பிர மாண வாக்கியம்பற்றிப் பற்பல ஆசங்கைகள் தோன்று கின்றன. வாக்கியம் நோக்கிய அளவில், மக்கள் செயலில் தெய்வங்கள் கலந்துறவாடிய செய்தி கூறப்படுகின்றமை காணலாம். இதுபோன்ற ஆதாரங்களை உண்மையெனக் கொள்ளுவார் இக்காலத்து அரியர். ஒருவகையான ஆட் சேபத்திற்கு மிடமின்றிப் பொருத்தமுற்று நிற்பது யான் குறித்த முடிவேயாகும். ஆகவே குறுந்தொகை மீதாகுக்கப் பெற்றகாலம் 4 - ம் நூற்றாண்டின் பிற்பகுதியென்றே கொள்ளற்பாலது. இனி, நூலிலுள்ள செய்யுட்கள் இயற்றப்பட்ட காலத்தை வரையறுக்க முயலுவோம். பாடினோர் பல காலத்தவரும் பலதேயத்தவருமாவர். ஆதலால் செய்யுட்க ளியற்றியது குறித்த ஒருகாலத்தன்று என்பது வெளிப் படை. குறுந்தொகையிலுள்ள செய்யுளோவ்வொன்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/112&oldid=1481712" இலிருந்து மீள்விக்கப்பட்டது