பக்கம்:இலக்கிய தீபம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

106 இலக்கிய தீபம் அனுப்பப்பெற்று, பாடலிபுத்திரத்திலே வெகுகாலம் தங்கி யிருந்தார். இவர் இந்நகரத்தை விஸ்தாரமாக வருணித்திருக் கின்றனர். பின்னர் அசோக சக்ரவர்த்தியால் அரசாங்கத் தலைநகராக இது கொள்ளப்பட்டது. இச்சக்ரவர்த்தி கி.மு. 273 முதல் 233 வரை அரசாண்டனர். இவர்தாம் தமிழ்த் தேசங்கள் முதலியவற்றிற்கு முதன்முதல் பௌத்த தரிசனத்தைப் பரவச்செய்யும் பொருட்டுத் தூதர்களை அனுப்பி, அங்கங்கே பௌத்தப் பள்ளிகளை நிருமித்தவர். இவர் ஆட்சிபுரிந்து 50 வருஷங்களுக்குப் பின்னர், கி. மு. 185-ல் மௌரிய வமிசம் அழிவுற்றுச் சுங்கவமிசத்தினர் கையில் மகதராஜ்யமும் அதன் தலைநகராகிய பாடலிபுத்திர மும் சென்று விட்டன. இவ்வமிசத்தின் முதலரசன் புஷ்யமித்திர னென்பவன். இவன் காலத்தில் பாக்டீரியா அரசனான இயூக்ரேட்டிஸ் என்பவனது சுற்றத்தானும் காபூல்தேசத்து அரசனுமாகிய மிநாண்டர் என்பவன் வட இந்தியாவிற் படையெடுத்து வந்து பாடலிபுத்திரத்தையே முற்றுகை செய்வான் போல நெருங்கினான். எனினும், கி. மு. 75-வரை அரசாண்ட சுங்கவமிசத்தினரது தலை நகராகவே பாடலிபுத்திரம் இருந்துவந்தது. இவ்வமிசத் திற்குப் பின் காண்வ வமிசத்தினர் கி. மு. 27-வரை மகதத் தில் அரசுபுரிந்தனர். இவ்வமிசத்திற்குப்பின் மகததேசம் அதன் தலைநகராகிய பாடலியுடன் ஆந்திரவம்சத்தினரது கைப்பட்டது. இவ்வமிசத்தினர் கி. பி. 225. வரை ஆட்சி புரிந்தனர். இதற்கப்புறம் பாடலிபுத்திரம் லிச்சவி மரபின ரால் கொள்ளப்பட்டதாயிருத்தல் வேண்டும். கி.பி.320-ம் வருடம் முதற்கொண்டு ஆண்டுவந்த குப்த அரசனுக்குப் பாடலி லிச்சவிகளிடமிருந்தே கிடைத்தது. குப்த அரசனான சந்திரகுப்தன் (320-360) பாடலியைத் தலைநகராகக்கொண்டு அரசுபுரிந்து வந்தான். இவனுக்குப்பின் சமுத்திர குப்தனால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/115&oldid=1481715" இலிருந்து மீள்விக்கப்பட்டது